'சென்னை,
கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப்
பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட,
ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி
இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு:
தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி
ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி
முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு
மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம்
தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்.,
3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம்
தேதியும் நடக்கிறது. இதில், சென்னை, திண்டுக்கல்,
கன்னியாகுமரி,
மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய,
ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை.
எனவே, செப்., 1ம்
தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய
ஆசிரியர் செல்ல வேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும்
கலந்தாய்விற்கு செல்லலாம். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
90 சதவீதம் :
இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு, மாநிலம் முழுவதும்,
நேற்று நடந்தது. இதில், 1,000 பேர், தங்களது சொந்த மாவட்டங்களில், பணி
நியமனம் பெற்றதாக, பள்ளிக்கல்வி வட்டாரம் தெரிவித்தது. மொத்தம் உள்ள,
14,700 இடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள், விழுப்புரம்,
கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட, வட மாவட்டங்களில் தான்
உள்ளன. இதனால், அதிகளவில் தேர்வு பெற்ற தென் மாவட்ட தேர்வர்கள், வேறு
வழியில்லாமல், வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் நிலை
ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...