ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 28 August 2014

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தொடர்ந்து பெற உறுதிமொழி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்று மற்றும் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி விளக்குகிறார்.வேறு மாவட்டத்துக்கு வேலைவாய்ப்பு பதிவை மாற்றம் செய்யும்போது பதிவு மூப்பு பாதிக்குமா?
இல்லை. பணி சூழல் காரணமாக ஓர் இடத்திலிருந்து வேறு இடம் அல்லது மாவட்டத்துக்கு செல்வது இயல்பான ஒன்று. எனவே, அவ்வாறு மாற்றம் செய்தாலும் பதிவு மூப்பு எதுவும் பாதிக்காது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தொடர்ந்து பெற சுய உறுதிமொழி ஆவணம் அளிப்பது அவசியமா?

ஆம். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஏப்ரல் மாதம் சுய உறுதிமொழி ஆவணம் வழங்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் வழங்க தவறினால், சம்பந்தப்பட்ட ஆண்டிலிருந்து உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும். சுய உறுதிமொழி ஆவண விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை அசல் மற்றும் நகல், நடப்பு வங்கி கணக்கு புத்தக அசல் மற்றும் நகல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு ஆகியவற்றை இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி?

அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்யும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஆன்லைன் முறையில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் பதிவு ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள். பின், கிரியேட் நியூ யூசர் ஐடி (create new user ID) என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின், தங்களது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து புதிய யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (User Id and Password) உருவாக்கி கொள்ள வேண்டும். பின், கண்டினியூ (Continue) தர வேண்டும். அதையடுத்து தாயின் பெயர், சாதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து, காண்டாக்ட் டீடெய்ல்ஸ் (Contact details) எனும் முகவரியில் கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அனைத்தும் பதிவு செய்த பின் ஓகே (ok) என்பதை கிளிக் செய்தால் பதிவு எண் வழங்கப்படும். அந்த பதிவை நாம் பிரிண்ட் (print) எடுத்துக் கொள்ளலாம். பதிவுதாரரின் யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை தவறாமல் குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை புதுப்பித்தல் அல்லது கூடுதல் பதிவுக்கு இது அவசியமாகும். 
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டள்ளன. முதுகலை பட்டபடிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவுமுறை 2001ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்
மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைப்பதற்கு 'சுசி லினக்ஸ்' என்னும் புதிய ஆன்லைன் சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணையதளத்தில் தங்களது பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள முடியும்.

புதிதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

* புதிதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும்.

* முதலில் டபுள்யூடபுள்யூடபுள்யூ.டிஎன்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் (http://tnvelaivaaippu.gov.in/Empower/) என்ற இணையதள முகவரிக்கு சென்று கிளிக் கியர் பார் நியூ யூசர் ஐடி ரெஜிஸ்டிரேஷன் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

* அதில் ஐ அக்ரீ என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, யூசர்ஐடி என்ற இடத்தில் புதிதாக ஒரு ஐடி கொடுக்கவும்.

* பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும், இமேஜ் கோடு என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடுஐ கொடுத்து சேவ் செய்தால் உங்களுக்கென்று ஒரு ஐடி கிரியேட் ஆகிவிடும்.

* அடுத்து வரும் பக்கத்தில் உங்களது பர்சனல் டீடெய்ல், கான்டாக்ட் டீடெய்ல், குவாலிபிகேசன் டீடெய்ல், டெக்னிக்கல் டீடெய்ல் ஆகியவற்றை பூர்த்தி செய்து சேவ் செய்தால் உங்களது ரெஜிஸ்டர் நெம்பர் கிரியேட் ஆகிவிடும்.

கவனிக்க 1:

குவாலிபிகேஷன் டீடெய்ல் பூர்த்தி செய்தவுடன் யேடு என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும். அதில் கிளிக் செய்து சேவ் கொடுக்கவும். இதே போன்று டெக்னிக்கல் டீடெய்லும் செய்ய வேண்டும்.

கவனிக்க 2:

மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் ஹோம் பகுதிக்கு சென்று பார்த்தால் பிரின்ட் ஐடி கார்டு என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.

கவனிக்க 3:

ஏதேனும் தவறு செய்திருந்தால் ஹோம் பகுதியில் மாடிபை கான்டாக்ட் பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.

கவனிக்க 4:

அப்டேட் ப்ரொபைலில் சென்று ரெனிவல் செய்து கொள்ளலாம்.

ரெனிவல் செய்வதற்கான விபரம்: உதாரணத்திற்கு,

ரெஜிஸ்டர் நம்பர்: ஏஆர்டி2012 எம்00007502 (ரெஜிஸ்டர் நம்பர் இப்படித்தான் இருக்கும்)

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியீட்டு எண்: சியூடி-என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம் - கூடலூர்)

பதிவு செய்த ஆண்டு :2010

ஆண்/ பெண்: M/F

பதிவு எண்: 7802

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்து கொள்ளவும்.

யூசர்ஐடி: ஏஆர்டி2012எம்00007502

பாஸ்வேர்டு: டிடி/எம்எம்/ஒய்ஒய்ஒய்

கடவுச்சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ஐடி கார்டு இப்படித்தான் இருக்கும். அவ்வளவு தான் நண்பர்களே... இனி கால விரையமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H