உயர்கல்வி
நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி சுற்றுலா, கள ஆய்வு
உள்ளிட்டவற்றிற்கு செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு
காண, சிறப்பு குழுவை, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) அமைக்கிறது நாடு
முழுவதும் மத்திய, மாநில பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள், அரசு, சுயநிதி
கல்லூரிகள் என, 30 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில்,
லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள், ஆண்டுதோறும்,
கல்விச்சுற்றுலா, பாடம் சார்ந்த சுற்றுலா, கள ஆய்வு, இன்பச் சுற்றுலா,
தொழிற்சாலை ஆய்வு அல்லது விளையாட்டு சார்ந்து வெளியிடங்களுக்கு
செல்கின்றனர். மாணவர்களுக்கு, அவர்கள் செல்லும் இடங்களில், பாதுகாப்பிற்கு
முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதுபோன்ற இடங்களில், அவர்கள் பல்வேறு
இன்னல்களை சந்திக்கின்றனர். மேலும், இமாசல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற
தெலுங்கானா மாநில மாணவர்கள், அங்குள்ள சட்லஜ் நதியில் இறங்கிய போது, அணை
திறந்துவிடப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 23 பேர் பலியாகினர். இது
போன்ற பல்வேறு சம்பவங்கள், நாடு முழுவதும், உயர்கல்வி நிறுவனங்களில்
பயிலும் மாணவர்களுக்கு நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள், எதிர்காலத்தில்
நிகழாவண்ணம் தடுக்க, யு.ஜி.சி., பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக, சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை தடுப்பதற்கான விதிகளை
வகுக்க, ஒரு வல்லுனர் குழுவை யு.ஜி.சி.,
அமைக்கிறது. இந்த
குழு வலியுறுத்தும் விஷயங்களை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் செயல்
படுத்தவும், யு.ஜி.சி., முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, அனைத்து
பல்கலைகளுக்கும்
சுற்றறிக்கை ஒன்றை, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து அனுப்பியுள்ளார்.
அதில், நாட்டில்
உள்ள அனைத்து பல்கலைகளும், மூன்று வாரங்களுக்குள், மாணவர்களை பாதுகாப்பது
குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...