பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 27 February 2015

பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குக் கையேடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.
பிளஸ் 2 தேர்வுப் பணியில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு அலுவலர்களாகவும், பத்தாம் வகுப்புத் தேர்வுப் பணியில் 1.20 லட்சம் ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர்.
தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவோருக்கான பல்வேறு அறிவுரைகள் இந்தக் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
அந்தந்த மைய முதன்மைக் கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த கூட்டத்தில் அறைக் கண்காணிப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளரிடம் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்க வேண்டும்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு மையத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாதாரண தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு அலுவலர்கள் அனைவரின் செல்லிடப்பேசிகளும் அணைக்கப்பட்டு, தேர்வு கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
அவசரத் தேவைக்கு மட்டும் மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அலுவலக அறையில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தேர்வு முடிந்ததும் தேர்வுக்கு வராதவர்களின் விவரங்களை பிற்பகல் 3 மணி முதல் 4 மணிக்குள்
www.tndge.in என்ற இணையதளத்தில் முதன்மைக் கண்காணிப்பாளரே பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள வசதி இல்லாத இடங்களில், அருகில் உள்ள தேர்வு மையத்தின் கணினி வசதியைப் பயன்படுத்தலாம் அல்லது மாவட்டக் கல்வி அலுவலக உதவியுடன் பதிவேற்றம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H