TNPSC STUDY MATERIALS TAMIL 100 QUESTION AND ANSWER PART 4: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 2 September 2016

TNPSC STUDY MATERIALS TAMIL 100 QUESTION AND ANSWER PART 4:

PRINT OUT THIS MATERIAL CLICK HERE
THANKS TO KALAISELVI
பொதுத்தமிழ் – 100 கேள்விகள் - விடைகள்
1 . அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை
நிறுவினார் ?
விடை - ஞானசபை
2 . மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
3 . தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள
மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
4 . என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும்
அதிகாரம் ?
விடை - அன்புடைமை
5 . பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு
எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
6 . திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை - வீரமாமுனிவர்
7 . கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை - ரஷ்யா
8 . உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள
இடம் ?
விடை - சென்னை
9 . பொருள் தருக – எய்யாமை .
விடை - வருந்தாமை
10 . அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின்
ஆசிரியர் ?
விடை - ஜெயவர்ஷினி
11 . உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள்
எத்தனை ?
விடை - 10
12 . இல்லார்க்கொன் றீயும் உடைமையும் ,
இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள்
இடம்பெறும் நூல் யாது ?
விடை - திரிகடுகம்
13 . உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை
பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு
வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்
14 . தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை - 9
15 . சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை - ஹிரோஷிமா
16 . திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த
மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை - திருநெல்வேலி
17 . திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
18 . டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு
தொடர்புடையவர் ?
விடை - கூடைப்பந்து
19 . இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம்
மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917
20 . ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை - வீரமாமுனிவர்
21 . நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப்
போன்றவர்கள் ?
விடை - வாய்க்கால்
22 . பொருத்துக
இடுகுறிப்பொதுப்பெயர் - காடு
இடுகுறிச் சிறப்புப்பெயர் –பனை
காரணப்பொதுப்பெயர் – பறவை
காரணச்சிறப்புப்பெயர் –மரங்கொத்தி
23 . தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என
பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி
24 . ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’
என்று பாடியவர் ?
விடை - பாரதியார்
25 . ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ –
இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை - தெற்கே உள்ள திருவாரூர்
26 . ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’
எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும்
படலம் யாது ?
விடை – மகவருள் படலம்
27 . தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள்
28 . திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள
செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை - 40
29 . நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை
அறியப்புகும்போது , ______ எனும் பண்பு
அடிப்படையாக அமையும் .
விடை - 40
30 . பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை - 5
31 . ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று
பாடியவர் ?
விடை - வாணிதாசன்
32 . நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு
இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்
33 . கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள
மாவட்டம் ?
விடை - பெரம்பலூர்
34 . வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப்
போற்றிப் பாடிய நூல் ?
விடை - சிலப்பதிகாரம்
35 . நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப்
பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும்
விரிவாக கூறும் நூல் ?
விடை - சிலப்பதிகாரம்
36 . உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு
எது ?
விடை – இந்திய ராஜநாகம்
37 . கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல்
38 . மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா
39 . நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும்
கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு
பயன்படுகிறது ?
விடை - வலிநீக்கி
40 . பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)
41 . மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர்
42 . பொருள் தருக – மடவார்
விடை - பெண்கள்
43 . பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற
புனைப்பெயர்களை உடையவர் ?
விடை - கண்ணதாசன்
44 . ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற
வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை - புறநானூறு
45 . நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
விடை – வாய்மொழி இலக்கியம்
46 . திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை - மருதகாசி
47 . ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்
48 . திருவருட்பாவில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை யாது ?
விடை - 5818
49 . ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும்
நூல் ?
விடை – பழமொழி நானூறு
50 . பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
51 . உலகம் ஐம்பூதங்களால் ஆனது
எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு
52 . நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு
அழைப்பார் ?
விடை - இந்து
53 . பொருள் தருக – மேழி
விடை - கலப்பை
54 . சந்திரகிரகணம் பற்றி கூறும்
பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை - திருக்குறள்
55 .’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை - கடுவெளிச்சித்தர்
56 . செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற
மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி
செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன்
வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை
57 . கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில்
எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை - கணிதம்
58 . ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ
முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான்
முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை - பெரியார்
59 .தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்
60 . வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை - 8
61 . ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின்
ஆசிரியர் ?
விடை - தாராபாரதி
62 . ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது
எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு
63 . வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும்
பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
64 . ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ;
ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
65 . போலி எத்தனை வகைப்படும் ?
விடை - 3
66 . கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு
வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார்
67 . பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில்
68 . இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம்
போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர்
69 . சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை - உத்திரப்பிரதேசம்
70 . தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை
கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை - பாரதிதாசன்
71 . தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை
72 . உலக வனவிலங்கு தினம் எப்போது
கொண்டாடப்படுகிறது ?
விடை – அக்டோபர் 4
73 . கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
விடை - காவிரிப்பூம்பட்டிணம்
74 . சென்னை எழும்பூர் அருங்காட்சியகம்
தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை - 1851
75 . யானைப்போர் காண்பதற்காக மதுரையில்
அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்
76 . பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின்
எண்ணிக்கை ?
விடை - 100
77 . ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’
எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை - கம்பராமாயணம்
78 . ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும்
வீரவிளையாட்டு ?
விடை - முல்லைநிலம்
79 . மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
80 . தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும்
அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும்
பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி
ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல்
அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்
81 . தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள்
பணிபுரிந்தார் ?
விடை - 8 ஆண்டுகள்
82 . ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை
அறிமுகிப்படுத்தியவர் ?
விடை - பாரதியார்
83 . ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை
எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற
பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று
கூறியவர் ?
விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
84 . கம்பனின் மிடுக்கையும் பாரதியின்
சினப்போக்கையும் தன் கவிதைகளில்
பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்
85 . துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில்
வல்லவர் யார்?
விடை - ராமச்சந்திரகவிராயர்
86 . குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை - பாரதிதாசன்
87 . அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்
88 . அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த
நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு
89 . இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை
வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
90 . சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை - புரம்
91 . ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’
எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை - நளதமயந்தி
92 . கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்
93 . சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை - 10
94 . இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை - 3
95 . திராவிட மொழிகளின் தாய் தமிழ் என ,
உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை - கால்டுவெல்
96 . மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
97 . அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)
98 . ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை - முதுமொழிக்காஞ்சி
99 . யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு
அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு
வளர்த்தார் ?
விடை - அஞ்சலையம்மாள்
100 . சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H