TNPSC PG TRB GENERAL TAMIL STUDY MATERIALS: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 23 August 2016

TNPSC PG TRB GENERAL TAMIL STUDY MATERIALS:

பொதுத்தமிழுக்குத் தேவையான முக்கியத் தகவல்கள்.
==============================
பாரதியார்
1. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் யாருடையது - பாரதியார்
2. எந்த மன்னர் பாரதியாருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கினார் - எட்டப்ப நாயக்கர்
3. பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில எந்த ஆன்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டது - 1949
4. முண்டாசு கவிஞன் என்று போற்றபடுகிறவர் யார் - பாரதியார்
5. பாரதியார் பிறந்த ஆண்டு எது - 1882
6. நவதந்திரக்கதைகள் படைத்தவர் யார் - பாரதியார்
7. பாரதியார் படைத்தது எது - பொன் வால் நரி
8. பாட்டுக்கொரு புலவன் யார் - சுப்பிரமணியன்
9. ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றுபாடியவர் யார் – பாரதியார்
10. ஔவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் யார் -பாரதியார்
11. பாரதியாரை அடைமொழியால் குறிக்கும் பெயர் எது - சிந்துக்குத் தந்தை
12. பாரதியாருக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் யார் - வ. ராமசாமி அய்யங்கார்
13. பாரதியின் முதல் பாடல் எது - தனிமை இரக்கம்
14. பாரதி தன்னை என்னவென்று அழைத்துக்கொண்டார் - ஷெல்லிதாசன்
15. பாரதியார் எந்த பத்திரிக்கையின் முலம் தனது அரசியல் கருத்துக்களைமக்களிடம் பரப்பினார் - இந்தியா
16. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பிரமணியன்

17. பாரதியார் அரசியல் குருவாக யாரை ஏற்றுக்கொண்டார் - பாலகங்காதர திலகர்
18. பாரதியாரின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் அஞ்சல்தலை ------------ ம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்டது – 1960
19. ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் பாரதியார் -----------------என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார் – ஷெல்லிதாசன்
20. பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் -------------------- ஆவார் - கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்
21. பாரதியாரின் ஞானகுரு ---------------------- ஆவார் - நிவேதிதா தேவி
22. பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் - விவேகபானு
23. பாரதியாரின் படத்தினை வரைந்தவர் - ஆர்ய என்ற பாஷ்யம்
24. பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் – கிருஷ்ணசாமி ஐயர்
25. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் ------------------ ஆகியவை ஆகும் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
26. கலகலென, குக்குவென என்பதன் இலக்கணக்குறிப்பு - இரட்டைக்கிளவி
27. -------------- ஆம் ஆண்டு பாரதியாருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார் – 1887
28. பாரதியார் ----------------- ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் – 1897
29. பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று பாரதியாரை புகழ்ந்து போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
30. பாரதியாரால் தம்பி என அழைக்கப்பட்டவர் - பரலி நெல்லையப்பர்

 பாரதிதாசன்

1. தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார் - பாரதிதாசன்
2. புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்டவர் யார் - பாரதிதாசன்
3. பாரதிதாசன் பிறந்த ஆண்டு எது - 1891
4. பாரதிதாசன் இயற்பெயர் என்ன - சுப்புரத்தினம்
5. பாரதிதாசனுக்கு பெரியார் வழங்கிய பட்டம் எது - புரட்சி கவிஞர்
6. பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி என்னும் பட்டம் யாரால் வழங்கப்பட்டது - அறிஞர்அண்ணா
7. பாரதிதாசன் எந்த நாடகத்திற்காக தங்கக் கிளி பரிசு வென்றார் - அமைதி-ஊமை
8. பாரதிதாசன் பிசிராந்தையார் என்னும் நாடகத்திற்காக வென்ற விருது எது -சாஹித்ய அகாடமி
9. சென்னை தபால் துறை மூலமாக பாரதிதாசனுக்கு ஒரு நினைவு அஞ்சல்தலைஎந்த ஆண்டு வெளியிடப்பட்டது - 2001
10. பாரதிதாசன் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது- 1954
11. பாரதிதாசன் தங்கக் கிளி பரிசு பெற்ற ஆண்டு - 1946
12. பாரதிதாசன் சாஹித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு - 1970
13. பாரதிதாசன் படைத்ததில் ஒன்று - பெண்கள் விடுதலை
14. பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இறந்த ஆண்டு எது – 1964
15. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்
16. புரட்சிக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் – பாரதிதாசன்
17. ----------------------- முதலிய பல நூல்களை பாரதிதாசன் எழுதியுள்ளார் -
குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின்
கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித்திட்டு, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம்,தமிழியக்கம், திருக்குறள் உரை
18. ----------------------- பாடிய வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்னும் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொண்டுள்ளது– பாரதிதாசன்
19. பாரதிதாசன் நடத்தி வந்த இதழ் - குயில்
20. உருசியக் கவிஞர் ----------------- போலவே பாவேந்தர் பாரதிதாசனும் விளங்குகிறார் -இரசூல் கம்சதோவ்
21. கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு
22. இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு
23. கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு
24. பேழை என்பதன் பொருள் - பெட்டி
25. பாரதிதாசன் ------------------ அன்று புதுச்சேரியில் பிறந்தார் - 29-4-1891
26. பெற்றோர் -------------------- ஆவார் - கனகசபை, இலக்குமியம்மாள்
27. பாரதிதாசன் எழுதிய ---------------- நாடகம் சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்றது -பிசிராந்தையார்
28. பாவேந்தர் பாரதிதாசன் -------------------------- அன்று இயற்கையெய்தினார் - 21-4-1964
29. பாரதிதாசன் ---------------ம் ஆண்டில் பழநி அம்மையாரை மணந்தார் – 1920
30. பாரதியார்மீது கொண்ட பற்றினால் --------------- எனத் தன் பெயரை மாற்றி அமைத்துக்கொண்டார் – பாரதிதாசன்
31. பாரதிதாசன் ----------------- ஆகியவற்றில் புலமை மிக்கவர் - தமிழ், பிரெஞ்சு,ஆங்கிலம்
32. பாரதிதாசனின் சிறப்பு பெயர்கள் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர்

நாமக்கல் கவிஞர்

1. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார் - நாமக்கல் கவிஞர்
2. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற தேசபக்திப் பாடலை பாடியவர் - நாமக்கல் கவிஞர்
3. காந்தியக் கவிஞர் யார் - வெ. இராமலிங்கம் பிள்ளை
4. சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர் யார் - வெ.இராமலிங்கம் பிள்ளை
5. மத்திய அரசு நாமக்கல் கவிஞருக்கு அளித்த விருதின் பெயர் என்ன - பத்மபூஷன்
6. நாமக்கல் கவிஞரின் காலம் எது - 1888 - 1972
7. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இது யாருடைய கூற்று - நாமக்கல் கவிஞர்
8. நாமக்கல் கவிஞருக்கு வழங்கப்படும் சிறப்புப்பெயர் எது - ஆஸ்தானக் கவிஞர்
9. சங்கொலி என்னும் நூலை இயற்றியவர் யார் - நாமக்கல் கவிஞர்
10. நாமக்கல் கவிஞர் எழுதிய நாவல் எது - மலைக்கள்ளன்
11. திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது என்று நாமக்கல் கவிஞரை பற்றி புகழ்ந்தவர் யார் - இராஜாஜி
12. நாட்டுக்கும்மி என்ற தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களை எழுதியவர் யார் - நாமக்கல் கவிஞர்
13. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று சொன்னவர் யார் - நாமக்கல் கவிஞர்
14. நாமக்கல் கவிஞரின் மொழிப்பெயர்ப்பு நூல் எது - காந்திய அரசியல்
15. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
16. நாமக்கல் கவிஞர் எழுதிய சிறுகாப்பியங்கள் - 5
17. நாமக்கல் கவிஞர் எழுதிய கவிதைத்தொகுப்புகள் - 10.
18. நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------------- விருது வழங்கிச் சிறப்பித்தது - பத்மபூஷண்
19. மலைக்கள்ளன் என்ற நாவலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
20. தரணி என்பதன் பொருள் - உலகம்
21. சொரூபம் என்பதன் பொருள் - வடிவம்
22. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற தொடரை உடைய பாடலைப் பாடியவர் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
23. நாமக்கல் கவிஞர் எழுதிய புதினங்கள் - 5
24. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது, காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக தோன்றியது என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரை புகழ்ந்து போற்றியவர் - இராஜாஜி
25. தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என பெருமையுடன் வழங்கப்படுபவர் யார் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
26. கவிஞர் வெ. இராமலிங்கனார், --------------------------------- இல் பிறந்தவர் - நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர்
27. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரின் பெற்றோர் --------------- ஆவார் - வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
28. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரின் காலம் - கி.பி. 1888 முதல் 1972 வரை
29. இன்ப சொரூபம் என்பதன் இலக்கணக்குறிப்பு – உருவகம்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் எது - தேரூர்
2. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஆண்டு எது - 1876
3. மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
4. காந்தள+ர்ச்சாலை பற்றிய ஆய்வு நூலை எழுதியவர் - கவிமணி
5. 1940இல் தமிழ்ச் சங்கம் சென்னையில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் தேசிக விநாயகம் பிள்ளைக்கு ------------- என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. - கவிமணி
6. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு எந்த ஆண்டு இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது - 2005
7. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ---------------- கவிபாடுவதில் வல்லவர். - தேனொழுகக்
8. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றிய கவிதைப் படைப்புகள் எது - மலரும் மாலையும்
9. ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர் யார் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
10. தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை என்று சொன்னவர் - நாமக்கல் கவிஞர்
11. சர். எட்வின் அர்னால்டு எழுதிய வுhந டுபைhவ ழக யுளயை என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் எது - ஆசிய ஜோதி
12. பாரசீக மொழியில் உருவாக்கப்பட்ட உமர்கய்யாம் பாடல்களை ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் யார் - கவிமணி
13. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றிய முதல் நூல் எது - அழகம்மை ஆசிரிய விருத்தம்
14. நாஞ்சில் நாட்டு கவிஞர் யார் – கவிமணி 
15. கவிமணி தேசிக விநாயகனார் இயற்றிய பிற நூல்கள் ---------------------------------முதலியனவாகும் -
 மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி
16. பேறு என்பதன் பொருள் - செல்வம்
17. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து உமர்கய்யாம்
பாடல்கள் என்னும் தொகுப்பை இயற்றியவர் - கவிமணி தேசிக விநாயகனார்
18. உமர்கய்யாம் ----------------------- நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் - பதினோராம்
19. நனி என்பதன் பொருள் - மிகுதி (மிக்க)
20. தரம் என்பதன் பொருள் - தகுதி
21. வையம் என்பதன் பொருள் - உலகம்
22. கவிமணி தேசிக விநாயகனார் ------------------------------------ ஊரில் பிறந்தவர் - கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூர்
23. கவிமணி தேசிக விநாயகனாரின் பெற்றோர் ------------------------------- ஆவார் - சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்
24. கவிமணி தேசிக விநாயகனாரின் காலம் - 1876 முதல் 1954 ஆம் ஆண்டு வரை 
25. உமர்கய்யாமின் முழுப் பெயர் -------------------------- என்பது ஆகும் - கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்
26. கதி என்பதன் பொருள் - துணை

: பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்திய நகரங்கள்

சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

 பம்பாய் - மும்பய் (1995)

மெட்ராஸ் - சென்னை (1996)

கல்கத்தா  - கொல்கத்தா (2000) 
-->

பாண்டிச்சேரி - புதுச்சேரி (2006)

ஒரிசா - ஒடிசா (2011)

1.  இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?
     இந்தியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர

2.  சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர்?
    திருவானைக்காவல்

3. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நாணயங்களில் எந்நாட்டு நாணயங்கள் அதிகமான கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
    ரோமன்

4.  தமிழ்நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் எது?
     புன்னைக்காவல்

5.  சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?
     காந்தி விருது

6.  தக்ஸ் வழிப்பறி கொள்ளையர்களை அடக்கியவர்
     வில்லியம் பெண்டிங் பிரபு

7.  நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது?
    நியுரான்

8. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு எது?
    நெப்ரான்

9.  M கூட்டின் அதிகப்படியான எலக்ரான்களின் எண்ணிக்ைக?
    18
10. தமிழ்நாடு என்று பெயர் கூட்டியவர் யார்?
     அறிஞர் அண்ணா

 ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள்  
முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி - 
குறிஞ்சி - மு - முருகன் 
முல்லை - தி - திருமால் 
மருதம்- இ - இந்திரன் 
நெய்தல் - வ- வருணன் 
பாலை - காளி (அ) கொற்றவை

 திணைக்குரிய சிறுபொழுதுகள்:

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்

திணைக்குரிய சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :

யாருக்கு மாலை வைத்து என்ன நன்மை

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல

: எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்கள்.

சி.மணி
தருமுசிவராமு
எஸ்.வைத்தீஸ்வரன்
சி.சு.செல்லப்பா

Shortcut:

மணி தரும் வைத்தியரிடம் செல்லலாம், எழுந்து வா

மணி - சி.மணி
தரு - தருமுசிவராமு
வைத்தி - எஸ்.வைத்தீஸ்வரன்
செல்ல - சி.சு.செல்லப்பா
எழு - எழுத்து

 சமவெளியில் வாழும் பறவைகள்
சுடலைக்குயில்
மஞ்சள் சிட்டு
செங்காகம்
பனங்காடை
தூக்கணாங்குருவி

எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வழி  (Shortcut)
  
சுடலை மஞ்சள் செங்கல்லை பணத்தோடு சமவெளியில் தூங்கி எறிந்தான்

சுடலை - சுடலைக்குயில்
மஞ்சள் - மஞ்சள் சிட்டு
செங்கல்லை - செங்காகம்
பண த்தோடு - பனங்காடை
சமவெளியில் - சமவெளியில் வாழும் பறவைகள்
தூங்கி எறிந்தான் - தூக்கணாங்குருவி

மரபுக்கவிதை
1.------------- கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக  அமைந்தன - பாரதியின்
2. ------------------ முதலியனவற்றைப் பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின –
 தமிழ்,தமிழர், தமிழுணர்வு, சமுதாய மலர்ச்சி, பெண்விடுதலை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை
3. விடுதலை இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் - நாமக்கல் கவிஞர்
4. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் கவிதைகளில் -------------------- சிந்தனைகள் மிளிர்கின்றன - காந்திய
5. சுரதாவின் கவிதைகளில் புதிய ------------------ காணலாம் - உவமைகளை
6. பாரதிதாசனைத் தொடர்ந்து, இயற்கையின் அழகை எழிலுறப் படம்பிடித்துக்
காட்டுவதில் ------------------- சிறந்து விளங்குகின்றார் - வாணிதாசன்
7. பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் - முடியரசன்
8. முடியசன் இயற்றிய நூல்கள் ---------------- முதலியனவாகும் - பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள்
9. கவிஞர் முடியரசனுக்கு பறம்புமலையில் நடந்த விழாவில் ---------------- என்னும்  பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது - கவியரசு
10. கவிஞர் முடியசனின் இயற்பெயர் - துரைராசு
11. முடியரசன் பிறந்த ஊர் - தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்
12. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் - பூங்கொடி
13. உவமைக் கவிஞர் என்னும் சிறப்பைப் பெற்றவர் - சுரதா
14. காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

: முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையகைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.  
இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது

மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை. 

நான்காவது மைசூர் போர் கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

MyMaManSri
My - மைசூர் போர் 
Ma - மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை  
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்

: முதல் புத்த சமய மாநாடு :

ஆண்டு : கி.மு. 487 

இடம் : இராஜகிருகம் 

கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு  

தலைமை :  மகாகசிபர்

இரண்டாம் புத்த சமய மாநாடு:

ஆண்டு : கி.மு. 387 

இடம் : வைசாலி 

கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ) காலசோகன்

தலைமை : சபகமி

மூன்றாவது புத்த சமய மாநாடு :

ஆண்டு :  கி.மு. 251 

இடம் : பாடலிபுத்திரம் 

கூட்டிய மன்னர் : அசோகர்

தலைமை : உபகுப்தர்

நான்காம் புத்த சமய மாநாடு :

ஆண்டு : கி.பி. 100 

இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)

கூட்டிய மன்னர் : கனிஷ்கர் 

தலைமை : வசுமித்திரர்

: மற்றொரு எளிமையான வழி:

“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“

1 – க
2 – உ
3 – ங
4 – ச
5 – ரு
6 – சா
7 – எ
8 –௮
9 – கூ
0 – 0

முடியரசன்

1. கவிஞர் முடியரசன் இயற்பெயர் என்ன - துரைராசு
2. கவிஞர் முடியரசன் பிறந்த ஆண்டு எது - 1920
3. கவிஞர் முடியரசன் சொந்த ஊர் எது - பெரிய குளம்
4. பூங்கொடி என்ற காவிய நூல் யாரால் இயற்றப்பட்டது - கவிஞர் முடியரசன்
5. திராவிட நாட்டின் வானம்பாடி யார் - முடியரசன்
6. கவிஞர் முடியரசரின் எந்த கவிதை பாவேந்தரால் தேர்வுசெய்யப்பட்டு முதற்பரிசு  பெற்றது - அழகின் சிரிப்பு
7. கவிஞர் முடியரசரின் பூங்கொடி என்ற காவியம் தமிழக அரசின் பரிசு பெற்ற ஆண்டு எது - 1966
8. கவிஞர் முடியரசன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு - 1987
9. திராவிட நாட்டின் வானம்பாடி என்ற பட்டத்தை கவிஞர் முடியரசனுக்கு யாரால்  வழங்கப்பட்டது - பேரறிஞர் அண்ணா
10. பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் கவியரசு என்ற  பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது - முடியரசன்
11. கவிஞர் முடியரசன் 1954 ஆம் ஆண்டு எந்த கவிதை தொகுப்புக்கு மாநில  அரசின் விருதை பெற்றார் - முடியரசன் கவிதைகள்
12. கவிஞர் முடியரசன் கவிதைகளை சாகித்திய அகாடெமி ---------------, ---------------  மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. - இந்தியிலும், ஆங்கிலத்திலும்
13. வீரகாவியம் இயற்றியவர் யார் - முடியரசன்
14. கவிஞர் முடியரசன் கவிதை தொகுப்பு – பாடுங்குயில்

வாணிதாசன்
1. ரமி என்னும் புனைப்பெயர் கொண்டவர் யார் - வாணிதாசன்
2. வாணிதாசன் இயற்பெயர் என்ன - அரங்கசாமி
3. பாரதிதாசன் பரம்பரை என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர் யார் - வாணிதாசன்
4. வாணிதாசன் யாரிடம் தொடக்கக் கல்வி பயின்றார் - பாவேந்தர் பாரதிதாசனிடம்
5. வாணிதாசன் எந்த மொழியில் புலமை பெற்றவர் - பிரெஞ்சு
6. தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த் யார் - வாணிதாசன்
7. பாவலர் மணி யார் - வாணிதாசன்
8. வாணிதாசனுக்கு வழங்கிய பட்டம் எது - கவிஞரேறு
9. தமிழ்நாட்டுத் தாகூர் யார் - வாணிதாசன்
10. திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும் என்று சொன்னவர்  யார் - திரு.வி.க
11. வாணிதாசன் மறைந்த ஆண்டு எது - 1974
12. எந்த நாடு வாணிதாசனுக்கு செவாலியர் என்ற பட்டத்தை கொடுத்தது - பிரெஞ்சு
13. தமிழ் - பிரெஞ்சு கையரக முதலி என்ற நூலை வெளிட்டவர் யார் - வாணிதாசன்
14. பொங்கற்பரிசு என்னும் கவிதை இயற்றியவர். - பாவலர் மணி

 சுரதா
1. உவமைக் கவிஞர் என்ற சிறப்புகுரியவர் யார் - சுரதா
2. சுரதாவின் இயற்பெயர் என்ன - இராசகோபாலன்
3. சுரதா பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் தன் பெயரை என்னவென்று  மாற்றிக்கொண்டார் - சுப்புரத்தினதாசன்
4. சுரதா யாரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார் - சீர்காழி அருணாசல தேசிகர்
5. சுரதாவின் முதல் நூல் எது - சாவின் முத்தம்
6. 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார்  தலைமையில் நடந்த விழாவில் என்ன பட்டம் வழங்கப்பட்டது - கவியரசர்
7. முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும்  பெற்றார் யார் - சுரதா
8. 1944 ஆம் ஆண்டு சுரதா எந்த திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார் - மங்கையர்க்கரசி
9. 1956 இல் ------------- என்ற சிறு காவிய நூலை சுரதா வெளியிட்டார். - பட்டத்தரசி
10. 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது யாருக்கு கிடைத்தது - சுரதா
11. சுரதா படைப்பு எது - அமுதும் தேனும்
12. சுரதாவுக்கு 1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு என்ன விருது  வழங்கிச் சிறப்பித்தது - பாவேந்தர் பாரதிதாசன்
13. 1969 இல் சுரதாவின் எந்த கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது - தேன்மழை
14. சுரதா பிறந்த ஆண்டு எது – 1921 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H