BT to PG Promotion Panel-ல் குளறுபடி! - இடர்பாடுகளை களைய BRTE (ARGTA)சங்கம்கோரிக்கை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 24 June 2016

BT to PG Promotion Panel-ல் குளறுபடி! - இடர்பாடுகளை களைய BRTE (ARGTA)சங்கம்கோரிக்கை:

  1. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக தகுதி வாரியாக பதவிஉயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் மூத்தவர்களுக்கு பதவி உயர்வுவழங்கப்பட்டுவருகிறது. பட்டியல் தயாரிக்கும்போது தகுதியுடையவர்கள் அனைவரின் பெயர்களும்கட்டாயம் பரிந்துரைக்கப்படவேண்டும் எனவும், இல்லாவிட்டால் துறை ரீதியிலானநடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
  2. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறதகுதியானவர்களின் விவரம் தலைமைஆசிரியர்கள் மூலமாக பரிந்துரைக்கப்படுவர்.இந்நிலையில்  ஆசிரியர்கள் அனைவரும் 1.6.2016 அன்று தேர்வுநிலை ஊக்க ஊதியம் பெற வாய்ப்பு ஏற்பட்டது. ஏனெனில் தேர்வுநிலைக்கு 3% 3% =6% ஊதியம் அதிகமாக நிர்ணயிக்கப்படும். அதன் பிறகு பதவி உயர்வில் சென்றால்அதற்கு தனியே 3% என மொத்தம் = 9% அடிப்படை சம்பளம் உயரும். அவற்றிற்குஅகவிலைப்படி போன்ற இதர பணப்பலன்கள் கணக்கிடப்பட்டு ஏறத்தாழ மாதந்தோறும் 8ஆயிரம் ரூபாய் உயரக்கூடும்.எனவே பதவி உயர்வு பட்டியலுக்கு தகுதிஇருந்தும் ஆசிரியர்கள்பலர் "பதவி உயர்வு பட்டியலில் தங்கள் பெயரை இணைக்க விரும்பவில்லை" என முறையாககடிதம் வழங்கினார்கள். 
  3. இத்தகவல் குறிப்பிட்ட ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில்பதிவு செய்யப்பட்டு அடுத்த 3 வருடங்களுக்கு பதவி உயர்வு பட்டியலில்அவர்களின்பெயர் இடம் பெறாமல் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.மேற்படி ஆசிரியர்கள் முறையாக பதவி உயர்வு வேண்டாம் என விடுவிப்புசெய்துள்ள நிலையில், ஒரு சில ஆசிரியர்கள் கடந்த வருடங்களில் (1.1.2013,1.1.2014 ) பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்று உள்ளார்கள். ஆனால் 1.1.2015 ஆம்ஆண்டிற்கான பதவி உயர்வு பட்டியலில் தொடர்ந்து பட்டியலில் இடம் பெறதகுதியிருந்தும் அப்பட்டியலில் தங்கள் பெயரை இணைத்துக்கொள்ளாமல்இருந்துள்ளார்கள். காரணம் - 1.6.2016 பதவி உயர்வு பட்டியல்  ஜுன் 2016 க்குபிறகே வெளியிடப்படும் என்பதால் அப்போது அவர்கள் தேர்வு நிலை முடித்து  6 சதவீதஊக்க ஊதியமும் பெற்று விடலாம் அடுத்த ஓரிரு மாதங்களிலேயே நடைபெறக்கூடிய பதவிஉயர்வு பட்டியிலும் இடம்பெற்று அதற்கு தனியே 3 சதவீதம் என மொத்தம் 9 சதவீதம்ஊதிய உயர்வை உடனடியாக பெற்று விடலாம் என கருதுவதே. இவ்வாறு அனைத்துபாடங்களிலும் சேர்த்து ஏறத்தாழ 180க்கும் அதிகமான ஆசிரியர்கள் பெயர்கள் கடந்தவருட பட்டியலுக்கே தகுதியிருந்தும் சேர்க்காமல், இவ்வருட பட்டியலில்சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

  4. இதனால் முறையாக விடுவிப்பு செய்த ஆசிரியர்கள் ஒரு புறம்வருத்தப்பட்டு உள்ள நிலையில் இக்குளறுபடியால் இவ்வருடம் பதவி உயர்வுபட்டியலில் இடம் பெற்று பதவி உயர்வு பெற வேண்டிய ஆசிரியர்கள் பலரின்பெயர்களும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அடுத்த நிலையில் உள்ள இவர்கள்பதவி உயர் பெற ஏறத்தாழ நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

  5. எனவே பதவி உயர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள மேற்படி குழப்பத்தைகளையுமாறும், கடந்த பதவி உயர்வு பட்டியலுக்கே தகுதி இருந்தும்  பெயரைசேர்க்காமல், இவ்வருட பட்டியலில் பெயரை சேர்த்துள்ள ஆசிரியர்கள் மீதுநடவடிக்கை எடுத்து அவர்களை பதவி உயர்வு பட்டியலில் இருந்து நீக்கி, துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றசங்கம்(ARGTA)மாநில பொதுச் செயலாளர் தா.வாசுதேவன் தலைமையில்  மாண்புமிகு தமிழகமுதலமைச்சர் அம்மா, பள்ளிக்கல்வி இயக்குனர் போன்றோரிடம் கோரிக்கை மனுவழங்கியுள்ளார்கள

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H