What is Health??? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 24 July 2016

What is Health???

ஆரோக்கியம் என்றால் என்ன ?
ஆரோக்கியமான மனிதன் என்றவுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  சிறந்த உடல் நலம் கொண்ட ஒருவர்தான் ஆரோக்கியமானவர்  என்பது பெரும்பாலோனாவரின் அபிப்பிராயம்.. சில சந்தர்ப்பங்களில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடலுடன் சேர்ந்து மனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
உண்மையான ஆரோக்கியம் என்பது என்ன என்பதை பகிர்ந்து கொள்வதே இக் கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும்.
முதலில், உடல் ஆரோக்கியம் பற்றிய பார்வையைச் செலுத்துவோம்.   உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம்,  உடற்பயிற்சி என்பனவற்றின் கூட்டு விளைவே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.  ஆரோக்கியமான உடலுக்கு உணவின் தன்மை, அதன் ஊட்டச்சத்தின் பங்கு, உணவின் அளவு, உடலின் ஒப்புதல் என்பன மிகவும் முக்கிய விஷயங்களாக அமைகின்றன.  உணவின் மிக முக்கியமான வெளிப்பாடு என்னவெனில் உண்ணும் வரை தாமாக  இருந்தவை உண்டவுடன் அவை நாமாக மாற்றப்பட்டு விடுவதுதான். அதாவது தாமாக இருந்தவற்றை உண்பதன் மூலம் நாமாக மாற்றிவிடுகிறோம்.  எனவே எந்த வகையான உணவுகள் நம்மில் ஒரு பகுதியாக  வேண்டும் என்பது நமது தெரிவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.   உணவைப்போன்றே உடல் சார்ந்த ஒழுக்கங்களும் உடல் நலத்தின் பிரதான தேவைகளாகும்.  சூழல் சுத்தம், உடல் சுத்தம், ஓய்வு, உறக்கம், உடல் உழைப்பின் அளவு போன்றனவும் ஒழுங்கான தொடர்ச்சியான உடற்பயிற்சியும் அவசியமாகின்றன.

ஆரோக்கியத்தின் அடுத்த பகுதியாக மன நலம் அவசியமாகின்றது.  மன நலம் என்பது மிகவும் ஆழமான பார்வைக்கு உட்படுத்தவேண்டியது.  இருப்பினும் ஒருசில விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். மனம் என்பது எண்ணங்களின் பண்டகசாலை.  நமது எண்ணங்களே நமது தெரிவுகளையும் அதன் மூலம் வாழ்க்கையின் நிலையையும் தீர்மானிக்கின்றன. மனத்தின் வெளிப்பாடு அல்லது மனோபாவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையைத் தீர்மானிக்கும் அளவுகோலாக அமைகின்றது.  மனோபாவம் என்பது பல்வேறு அடையாளங்களாக இனங்காணப்படுகின்றன. இதை அடிப்படையாக வைத்தே ஒருவர் பற்றிய மற்றவர்களது பார்வை அல்லது மதிப்பீடு வெளிப்படுத்தப்படுகின்றது.  இந்த வகையான மதிப்பீடுகளோ எண்ணற்றவை.  எண்ணற்றவை மட்டுமல்ல மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அர்த்தமற்றவையுமாகும்.

 ஒருவர் பற்றிய இன்னொருவரது மதிப்பீடானது ஒப்பீட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது.  ஒருவரை நாம் அவரது கல்வி, பொருளாதாரம், சமூக நிலை என்பவற்றில் ஒப்பீடு செய்யலாம்.  இவை ஒப்பீட்டுக்கான அளவுகோல்களே.  இந்த அளவீடுகள்  பலருக்கிடையில் பொருத்தமானதாக இருக்கும்.   ஆனால் ஒருவரது மனோபாவம் சார்ந்த அளவீடுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக, ஒரே அளவானதாக அமைவதில்லை.  அமையவும் முடியாது. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவனாக இருப்பதும் தனித்துவம் என்பது ஒப்பீட்டுக்கு இடமளிப்பதில்லை என்பதுமாகும்.
[18:59, 23/7/2016] +91 95510 53137: அடுத்து நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய விஷயம் ஒருவரது உண்மையான ஆரோக்கியத்தைத்  தீர்மானிப்பது எது? என்பதுதான்.  முன்னர் குறிப்பிட்டதைப் போன்று உடல் நலம் சம்பந்தமாக நம்மால் மேற்கொள்ளக்கூடிய அத்தனை வழிமுறைகளையும் நாம்  கடைப்பிடித்தாலும் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பல காரணிகள் நமது உடல் நலத்தில் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பதை நாம் மறந்துவிடக்கோடாது.  சில சந்தர்ப்பங்களில் சில நோய்கள் நம்மை அறியாமலேயே நம்மைக் கைப்பற்றி விடுகின்றன.  ‘இந்த நோய் எனக்கு எப்படி வந்தது?’ என்று நாமே அதிர்ச்சியடைந்து விடுகிறோம்.  அதுமட்டுமன்றி, உடலானது முதிர்ச்சியை நோக்கி நகர்வதால் அதன் செயற் திறனும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாக அமைகின்றது.

அடுத்து நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் மனம் சார்ந்த்தது.  மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது  நாம் எல்லோரும் அறிந்துள்ள ஒன்றே.  எவ்வளவு தான் செல்வங்களும், வசதி வாய்ப்புக்களும் இருந்தாலும் மனம் சந்தோசமாக இல்லாவிட்டால் எல்லாமே பயனற்றுப் போய்விடும் என்பதும் நாம் அறிந்ததே.  நலமான உடலைக்கூட நலமற்ற மனம் மோசமாகத் தாக்கிவிடுகிறது. எனவே ஆரோக்கியமான மனம் கொண்டவனே ஆரோக்கியமான மனிதன் என்பது உறுதியாகிவிடுகின்றது. 

ஆரோக்கியமான மனிதன் என்பவன் ஆரோக்கியமான மனத்தைக் கொண்டவன் என்பதைப் பார்த்தோம்.  ஆரோக்கியமான மனம் கொண்டவன் யார்?  திடமான, உறுதியான மனம் கொண்டவன் தான் ஆரோக்கியமானவன்.  இந்தத் திடமும் உறுதியும் உள்ள மனத்தைக் கொண்டவன்  யார்?  தாழ்வு மனப்பான்மை இல்லாத மனிதன் தான் அவன். அதாவது, தனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராதவன் தான் ஆரோக்கியமான மனிதன்.  தாழ்வு மனப்பான்மை என்பது மிகக் கொடிய நோய்.  ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகப் பெரிய தடை, மிக மோசமான எதிரி.  தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம்.  ஆரோக்கியமான மனிதனாக வாழ்வதற்குத் தப்பித் தவறிக்கூட தாழ்வு மனப்பான்மை உங்களைத் தொட்டுவிட அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் தனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராத மனிதன் மட்டுமே ஆரோக்கியமான மனிதனாவான்.உடல் மன நலம் பேணுவோம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H