உடல் எடையை குறைக்கும் கொள்ளு குழம்பு:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து
கொள்ளலாம். இன்று கொள்ளு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
கடுகு - அரை ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்,தேவையான பொருட்கள் :
கொள்ளு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
கடுகு - அரை ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 5,
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
புளி - 50 கிராம்,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். பொடியாக நறுக்க வேண்டாம்.
* கொள்ளுவை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
* கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்த பின் சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இAஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூளை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்த கொள்ளு, தேவையான அளவு உப்பு போட்டு குழம்பு திக்கான பதம் வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* கடைசியாக குழம்பை இறக்கும் போது கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.
* சுவையான கொள்ளு குழம்பு ரெடி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...