CPS TO GPF | SGT GRADE PAY :NEWS - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 27 March 2017

CPS TO GPF | SGT GRADE PAY :NEWS

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்
சிறுகணல்
1.       ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,

2.       1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும் இடைநிலை
ஆசிரியர்களுக்கும்,

3.       CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம் மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய் வேண்டுமென்று உறுதியாய் நிற்கும் அனைத்துவகை சுமார் 55 ஆயிரம் ஆசிரியர்களுக்கும்,
                                                - “இயக்கங்கள் கடந்து, கூட்டு நடவடிக்கைக் குழுக்கள் கடந்து, முகம் & முகவரி கடந்து; ஏன் அனைத்து மாச்சரியங்களும் கடந்து” – மிகவும் ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்ட நீங்கள் மட்டும் ஓர் அணியில் இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட
மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
  - உங்கள் வாய்மை வழிகாட்டி,
 . சேவியர் ஜோசப் கென்னடி,
 துணைப் பொதுச் செயலாளர்,
  தமிழக ஆசிரியர் மன்றம்.
                                                                                
                                    உங்களுடைய வலியும், வேதனையும், சகல சௌகரிய ஓய்வூதியத் தலைவர்களுக்கோ (அல்லது) உங்கள் பிரதானமாய் முன்னிறுத்தி உங்களை வைத்துப் போராடி உங்களுக்கு ரூ.750/- ம், தங்களுக்கு ரூ.1100/- முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும் ரூ.5700/-) பெற்றுக் கொண்ட தலைவர்களுக்கோ ஒருவேலை புரிந்தாலும்கூட,
·         அவர்களின் ஈகோ மட்டும், ஒருநாளும் அவர்களை விட்டுப் போகப்போவதும் இல்லை.
·         அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்று பிரச்சனை தீரும்வரை, தொடர்ந்து போராடி வெல்லப்போவதும் இல்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அரசா காரணம்?
·         உங்கள் வலியும், வேதனையும் நீங்கப் போவதும் இல்லை.
·         இதனால் அவர்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. மாறாக இலாபமே !
·         இந்த நிதர்சனத்தை நீங்கள் அறிவார்த்தமாய் உணரச் செய்யவே இம்மடல் என்று எண்ண வேண்டாம். அதையும் தாண்டி சரியான வழிகாட்டும் செயலேயாகும் !
பாதிக்கப்பட்ட மூன்று பிரிவு ஆசிரியர்களையும் பார்த்து நான் மிகவும் வெளிப்படையாக சிலவற்றைக் கேட்டாக வேண்டும்.”
1.     மாநில அரசின் அனைத்து வகை ஊதிய விகித நிலையினருக்கும் (ஏன் இன்னும் சிலருக்கு உயர்த்திக்கூட வழங்கிய நிலையில்) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் வழங்கிவிட்டு உங்களுக்கு மட்டும் வழங்காதது;
                                      i.        சமூக நீதிக்கு எதிரானது
                                     ii.        நியாயமற்ற செயல்
- என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?
2.  அப்படியானால், செய் அல்லது செத்துமடி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நான் எனக்கெதிரான இந்த அநீதியைக் களையாமல் ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய் உறுதியேற்கிறீர்களா?
3. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தங்களுக்கு OPS வைத்துக் கொண்டு எங்களுக்கு CPS- கொடுக்காமல் இரத்து செய்வது,
                                      i.        தவறு
                                     ii.        அநீதி
                                    iii.        எந்த விதியின் கீழும் நியாயப்படுத்த முடியாது.
                                    iv.        OPS என்பது எனது வாழ்வுரிமை,
                                     v.        அது கொடுபடா ஊதியம்,அதை அடையாமல் நான் ஓயமாட்டேன்
-       என்று உறுதியாய் சபதம் ஏற்கிறீர்களா?
4.காலத்தே, அறவழி போராடி, குறைந்தபட்சம் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் அறிக்கையில்,
                          i.   மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வோம்,
                                                   ii.        CPS – இரத்து செய்து, OPS- அமல்படுத்துவோம்- என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில் நாம் ஆட்சி அமைப்பது கடினம்.- என்ற நிலையை ஏற்படுத்தாமல் விடமாட்டேன் என்று உறுதி கொண்ட நெஞ்சினராய் இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வாய்மை வழிகாட்டி சொல்வதை மனதில் போட்டு வீருநடை போடத் தவறாதீர்கள். ஆம், முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக் குழுவை உருவாக்குங்கள்.

5.     அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று பிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும் ஒன்றிணையுங்கள். நான் உட்பட, பாதிக்கப்படாத எவரையும் கட்டாயம் உள்ளே சேர்க்காது விலக்கி வையுங்கள்.வேண்டுமானால், வெளியில் இருந்து வழிகாட்ட மட்டும் சொல்லுங்கள்.

6. முழு ஆண்டு விடுமுறையைப் போராட்ட நாளாகத் தேர்ந்தெடுங்கள். முற்றுகை, மறியல், வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறு செய்யாது அரசு உள்ளிட்ட அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும் தொடர்ச்சியாகப் பல நாட்கள் கூட்டுவது மட்டுமே இலக்காக இருக்கட்டும்.
7.     இடம், சென்னைக் கடற்கரையை மக்கள் கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது  திண்டுக்கல் மலைக் கோட்டையை மக்கள் கோட்டையாக மாற்றுவதாகவோ அல்லது சிறை நிரப்புவதற்குப் பதிலாக ஸ்டேடியத்தை நிரப்புவதாகவோ இருக்கட்டும்.
8.     அங்கே, வாயில் கருப்புத்துணி கட்டியபடி பதாகைகளை ஏந்தி ஒரு மவுனப் புரட்சியை மட்டும் நிகழ்த்துவதாக அமையட்டும்.
9.     அரசு உட்பட, யார் யாரெல்லாம் இந்தக் வேள்வியின் நியாயத்தை உணர்கிறார்களோ அவர்கள் யாவரும் வாழ்த்துரை வாருங்கள் என்று பொது அழைப்பு மட்டும் விடுங்கள்.

10. 
                      i.        இப்போராட்டத்தால், மாணவர்கிளின் கல்வி பாதிக்கப் போவதில்லை.
                     ii.        அரசு எந்திரம் முடங்கப் போவது இல்லை.
                    iii.        பொதுமக்களுக்கு இடையூறு இல்லை.
ஆகவே, இப்போராட்டம் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும் !!
Ø  செய்வீர்களா ? அல்லது
Ø  அறுப்பவன் பின்னால் செல்லும் ஆடுபோல் இருப்பீர்களா ? அல்லது
Ø  “Satisfied with what you have” என்று வசனம் பேசப் போகிறீர்களா ?
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
                        - இவ்வாறு எழுதுவது விரக்தியின் விளிம்பிநின்று என எண்ண வேண்டாம். நம்பிக்கை ஒளிக்கீற்றிநின்றேயாம் !!
நன்றி !
                                                                                                                                                                 இவண்,
                                      . சேவியர் ஜோசப் கென்னடி.
                                      துணைப் பொதுச் செயலாளர்,
                                 தமிழக ஆசிரியர் மன்றம்.திண்டுக்கல்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H