செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்:
நம்பகமான ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் செல்போனை வைரஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கலாம்.
படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை ஸ்மார்ட் போனை கையில் வைத்து வித்தை
காட்டிக்கொண்டிருக்கும்போது, உலகின் வலிமையான தலைவர்களான அமெரிக்க
அதிபருக்கும், இங்கிலாந்து பிரதமருக்கும் அந்த கொடுப்பினைகள் இல்லை.
என்னதான் ஆட்சி அதிகாரமெல்லாம் இருந்தாலும் ஸ்மார்ட் போன் உபயோகிக்க மட்டும் எப்போதும் நோதான். இவர்களுக்கென்று என்கிரிப்ட் செய்யப்பட்ட பிளாக்பெரி போன் வழங்கப்படும். இதில் இன்டர்நெட்டோ, வீடியோவோ, இசையோ கேட்க முடியாது. வெறுமனே பேச மட்டும்தான் முடியும். பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு.
என்னதான் ஆட்சி அதிகாரமெல்லாம் இருந்தாலும் ஸ்மார்ட் போன் உபயோகிக்க மட்டும் எப்போதும் நோதான். இவர்களுக்கென்று என்கிரிப்ட் செய்யப்பட்ட பிளாக்பெரி போன் வழங்கப்படும். இதில் இன்டர்நெட்டோ, வீடியோவோ, இசையோ கேட்க முடியாது. வெறுமனே பேச மட்டும்தான் முடியும். பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு.
அட, அவர்கள் மட்டும்தான் போனை என்கிரிப்ட் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியுமா. நம்மால் முடியாதா என்று கேட்பவர்களுக்கு பதில், முடியும். நாமே கூட நமது செல்போனை எளிதாக என்கிரிப்ட் செய்யலாம். செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் ஆப்சனுக்குக் கீழ் அல்லது செக்யூரிட்டியில் சென்றால் என்கிரிப்ட் என்ற வசதி இருக்கும்.
இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் டிகிரிப்ட் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நமது போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது. நம்பகமான ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் செல்போனை வைரஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...