தொழிற்நுட்ப தேர்வுக் கான, 'ஹால் டிக்கெட்' இன்று
வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநிலம் முழுவதும், வரும், 29ல், தொழிற்நுட்ப தேர்வுகள் துவங்குகின்றன.
இதற்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில், விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து, ஹால்
டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.
அச்சுக்கலைப் பாடப் பிரிவின், அனைத்துப் பாடங்களின்
கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வுகள், சென்னை தேர்வு மையங்களில்
நடக்கும். வேளாண் பாடம் எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்தின் முதன்மை
கண்காணிப்பாளர் மூலம், செய்முறைத் தேர்வு குறித்த விபரங்களை தெரிந்து
கொள்ளலாம். மேலும், 'மாடலிங்' என்ற, மாதிரி அமைத்தல் தேர்விற்கு
விண்ணப்பித்தோர், தேர்வுக்கு தேவையான உபகரணங்களை, தாங்களே தேர்வு
மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...