பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை
மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும்
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அந்த
பணியை செய்ய இருக்கிறது. அதில் கலைதிட்டம், பாடத்திட்டம் மற்றும்
பாடப்புத்தகங்கள் தயாரித்து வடிவமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணியை
அனுபவம் மிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களை
கொண்டு செயல்படுத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு
செய்துள்ளது.
இதற்காக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இணைய தளம் மூலம் 23ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த கால அவகாசம் ஜூலை
2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...