புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு,
புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. ஆண்டு தோறும் புதிய
புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும்,
அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய
முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும்,
பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து,
தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும்
அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மரங்களின் அழிப்பை
குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது.
எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின்
புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...