தமிழகத்தில் மிதமான வெப்பம் : வட மாநிலங்களில் சுட்டெரிக்கும்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 19 March 2018

தமிழகத்தில் மிதமான வெப்பம் : வட மாநிலங்களில் சுட்டெரிக்கும்:

இன்னும் இரண்டு வாரங்களுக்கு, தமிழகத்தில் மிதமான வெப்பநிலை இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட கிழக்கு பருவமழை மற்றும் குளிர்காலம் முடிவுக்கு வந்து, கோடை காலம் துவங்கியுள்ளது. ஆனாலும், எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், கோடையின் துவக்கத்தில், இந்திய கடற்பகுதியில் புயல் சின்னம் உருவாகி, தென் மாவட்டங்களில் மழை கொட்டியுள்ளது. சென்ற வாரம், இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தீவிர மண்டலத்தால், தென் மாவட்டங்கள், வடக்கு மற்றும் வட மேற்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், வரும் இரண்டு வாரங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, இந்திய வானிலை மையம் முன் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, 'வரும், 28ம் தேதி வரையிலான வானிலையை பொறுத்தவரை, வடமாநிலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும். 'தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், இயல்பான வெப்பநிலை நிலவும். புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயலோ உருவாக வாய்ப்பில்லை' என, கணிக்கப்பட்டுள்ளது.தென்காசியில் 7 செ.மீ., மழை
நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, தென்காசியில், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஆய்க்குடி, 6; திருபுவனம், திருநெல்வேலி பாபநாசம், கோவில்பட்டி, 5; ஆண்டிப்பட்டி, செங்கோட்டை, 4; துறையூர், பேச்சிப்பாறை, பெரம்பலுார், தளி, 3; வத்திராயிருப்பு, மரந்தஹள்ளி, உதகமண்டலம், கோத்தகிரி, பெரியகுளம், ஒகேனக்கல், சேத்தியாத்தோப்பு மற்றும் கூடலுாரில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H