ஸ்மார்ட்போன் கொண்டு கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 20 January 2019

ஸ்மார்ட்போன் கொண்டு கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட்போன் கொண்டு கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி? ஸ்மார்ட்போன் இருந்தால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும் உணர்வு ஏற்படும். ஸ்மார்ட்போன் இல்லாமல் சில நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு நம்மில் பலரும் சிக்கியிருக்கிறோம். ஸ்மார்ட்போன் கொண்டு தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி, பொழுதுபோக்கு, கல்வி என பல்வேறு அம்சங்களை பயன்படுத்த முடியும்.
இதேபோன்று ஸ்மார்ட்போன் கொண்டு கம்ப்யூட்டரையும் இயக்க முடியும். கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கவோ அல்லது அவற்றில் உள்ள தரவுகளையோ இயக்க வேண்டுமா. இவற்றை செய்ய ரிமோட் டெஸ்க்டாப் கனெக்ஷன் அம்சம் இருக்கிறது. 

இந்த அம்சம் ஆர்.டி.பி. (RTP) அதாவது ரிமோட் டெஸ்க்டாப் ப்ரோடோகால் மூலம் பயனர்கள் தங்களது சாதனங்களை இயக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ வழி செய்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

க்ரோம் எக்ஸ்டென்ஷன் மூலம் இயக்கலாம்:

1. ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தில் அதற்கு உரிய ஆப் ஸ்டோரை திறக்க வேண்டும் 

2. க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் 

3. இனி, கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தில் கூகுள் க்ரோமை திறக்க வேண்டும் 

4. க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் எக்ஸ்டென்ஷனை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் 

5. இனி அட்ரஸ் பாரில் 'chrome://apps' என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

6. இனி க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும் 

7. அடுத்து, 'My Computers' பகுதியில் உள்ள 'Get started' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

8. இந்த எக்ஸ்டென்ஷன் தானாக டவுன்லோடு ஆகி, இன்ஸ்டால் ஆகும் 

9. இன்ஸ்டால் ஆகி முடிந்ததும், எக்ஸ்டென்ஷன் பகுதிக்கு சென்று 'Enable Remote Connections' ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும் 

10. உங்களது இணைப்புக்கு புதிய கடவுச்சொல் பதிவு செய்து 'OK' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

11. ஸ்மார்ட்போனில் செயலியை திறந்து, 'PC' பெயரை க்ளிக் செய்ய வேண்டும் 

12. நீங்கள் பதிவிட்ட கடவுச்சொல் பதிவு செய்து, பயன்படுத்த துவங்கலாம்

ரிமோட் டெஸ்க்டாப் வலைத்தளம் பயன்படுத்தலாம்:

1. முதலில் கூகுள் க்ரோம் சென்று 'remotedesktop.google.com' வலைத்தளம் செல்ல வேண்டும் 

2. அடுத்து 'Remote Access' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

3. இனி, 'Turn On' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

4. உங்களது கம்ப்யூட்டருக்கு புதிய பெயர் அல்லது ஏற்கனவே இருக்கும் பெயரை பயன்படுத்தலாம் 

5. இனி 'Next' ஆப்ஷனை க்ளிக் செய்து புததாக கடவுச்சொல் பதிவிட வேண்டும் 

6. அடுத்து 'Start' பட்டனை க்ளிக் செய்யவும் 

7. குறிப்பிட்ட ஆப் ஸ்டோர்களில் இருந்து 'Chrome Remote Desktop' செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யவும் 

8. செயலியை திறந்து, கம்ப்யூட்டர் பெயரை க்ளிக் செய்ய வேண்டும் 

9. இறுதியில் கடவுச்சொல் பதிவிட்டு பயன்படுத்த துவங்கலாம்

1 comment:

  1. RRB ALP CBT 1 Result 2018 will be out by the 1st week of November 2018. Its is Expected, RRB ALP Result 2018 for CBT-1 will be released before Diwali. RRB will declare the RRB ALP Result 2018 online on the 21 regional RRB Websites. Candidates can check their Railway ALP Result 2018 by entering their Registration ID and Date of Birth.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H