10,11,12ம் வகுப்புப் பொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம்
கண்காணிக்கப்பட உள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறை
இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
முதல் கட்டமாக அதிக கண்காணிப்பு தேவைப்படும் தேர்வு மையங்கள் சிசிடிவி
கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. அந்த மையங்களில் அனைத்து
நடவடிக்கைகளும் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.
ஏற்கனவே 3000 தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன.
இது மேலும் 100 மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளன.அடுத்த ஆண்டு முதல் அனைத்து தேர்வு மையங்களும் முழு அளவில் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதே போன்று பறக்கும் படையினர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு பொதுத் தேர்வின் போது கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவற்றை தடுக்கவே இது போன்ற நடவடிக்கையில் பள்ளிக்கலவித்துறை இறங்கியுள்ளது. தேர்வு மையங்களுக்குள் தனியார் பாலி ஆசிரியர்களுக்கு இனி அனுமதி கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...