இந்தியாவைக் கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணால்
பார்க்கலாம். இன்று (19.03.2019, செவ்வாய்) மாலை சரியாக 6.42 மணிக்கு
தெற்கு-தென்மேற்கு திசையில் 11° -இல் இது தெரிய தொடங்கும். வடகிழக்கு
திசையில் 12°-இல் புவியில் நிழலில் மறைந்து விடும். 6 நிமிடங்கள் இதை
காணலாம். சூரிய ஒளிபடுவதால் பிரகாசமான நட்சத்திரம் போலவும், வேகமாக நகரும்
விமானம் போலவும் தெரியும்.
4,19,455 Kg எடையுடன் மணிக்கு 27,600 கி.மீ வேகத்தில் 400 கி.மீ உயரத்தில்
92 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி
வருகிறது. எனினும் காலை 5.00 மணிக்கு மேலும் மாலை 7.00 மணிக்குள்ளும்
வெளிச்சமில்லாத நேரத்தில் மட்டுமே காண முடியும். நாசாவின் வலைத்தளத்தில்
இந்த நிலையத்தை காணும் நேரத்தை அறியலாம்.
தற்சமயம் Anne McClain(USA), Oleg Kononenko(Russia), David
Saint-Jacques(Canada), Alexey Ovchinin(Russia), Nick Hague(USA),
Christina Koch(USA), ஆகிய 6 விண்வெளி வீரர்கள் இதில் தங்கி எடையற்ற,
புவியீர்ப்பு விசையற்ற நிலையில் மருத்துவம், இயற்பியல், உயிரியல்,
வானவியல், வானியல் தொடர்பான பற்பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...