காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்-22-07-2019 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 21 July 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்-22-07-2019



*இன்றைய திருக்குறள்*

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
 வேறாகும் மாந்தர் பலர்.

*மு.வ உரை*:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

*கருணாநிதி  உரை*:
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.


*சாலமன் பாப்பையா உரை*:
எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
 - சுவாமி விவேகானந்தர்

♻♻♻♻♻♻♻♻

*பழமொழி*

Charity is a double blessing.

தருமம் தலை காக்கும்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?
                                *காந்தள்(Gloriosa)*

2. இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?
                              *தாமரை*

3.தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
                         
*ஐசக் சிங்கர்*

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*

*Adjectives*

Adjectives describe or give information about nouns or pronouns.

*For example*:-
The grey dog barked. (The adjective grey describes the noun "dog".

The good news is that the form of an adjective does not change. It does not matter if the noun being modified is male or female, singular or plural, subject or object.

Some adjectives give us factual information about the noun - age, size colour etc (fact adjectives - can't be argued with). Some adjectives show what somebody thinks about something or somebody - nice, horrid, beautiful etc (opinion adjectives - not everyone may agree).

♻♻♻♻♻♻♻♻

*அறிவோம் தமிழ்*

*எழுத்து முறைமைகள்*
 எழுத்து முறைமை
எழுத்து முறைமை, அதாவது எழுதும் முறைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, பட எழுத்து முறை, அசையெழுத்து முறை, அகரவரிசை முறை, featural முறை என்பன. இன்னொரு வகையான கருத்தெழுத்து முறை ஒரு மொழியை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் அளவுக்கு வளரவில்லை. ஆறாவது வகையான ஓவியஎழுத்து முறையும் தன்னளவில் ஒரு மொழியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அளவுக்குப் போதியதல்ல. ஆனால், படவெழுத்து முறையின் ஒரு முக்கியமான உறுப்பாக இது உள்ளது.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*Important Used Words*

 Backbone முதுகெலும்பு

 Forhead நெற்றி

 Saliva உமிழ் நீர்

 Blood இரத்தம்

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*ஆற்றைக் கடக்கும் கதை*

 முருகேசனுக்கு நான்கு குழந்தைகள் நந்தினி பிரியா பிரபுஇ முத்து என்பன அவர்கள் பெயர்கள். நந்தினி மற்றும் பிரியாவின் எடை 25 கிலோ பிரபு மற்றும் முத்துவின் எடை 50 கிலோ. ஒரு முறை அவர்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆழமான ஆறு எனவே நடந்து போக முடியாது. கரையில் படகு ஒன்று இருந்தது. ஆனால் படகோட்டி கிடையாது. நால்வருக்கும் படகு விட தெரியும். ஆனால் ஒன்றாகப் போக முடியாது. ஏனெனில் அந்தப் படகு 50 கிலோ எடைக்கு மேல் கொள்ளாது. நால்வரும் எப்படி ஆற்றை கடப்பார்கள்?

*விடை*:
 முதலில் நந்தினியும் பிரியாவும் ஆற்றை கடப்பார்கள் பிறகு பிரியா படகை திருப்பி கொண்டுவருவாள்.

 பிறகு பிரபு ஆற்றை கடப்பான். பின் அங்கு இருக்கும் நந்தினி படகை திருப்பி கொண்டுவருவாள்.

 மறுபடியும் நந்தினியும் பிரியாவும் ஆற்றை கடப்பார்கள் பிறகு பிரியா படகை திருப்பி கொண்டுவருவாள்.  பிறகு முத்து ஆற்றை கடப்பான். பின் அங்கு இருக்கும் நந்தினி படகை திருப்பி கொண்டுவருவாள். மறுபடியும் நந்தினியும் பிரியாவும் ஆற்றை கடப்பார்கள்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮முழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்.

🔮ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் உடன்கட்டை ஏறிய பெண்களின் ‘சதிக்கோயில்கள்’ கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆய்வுக்குழு தகவல்.

🔮இந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-7 ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.

🔮34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கீடு - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.

🔮மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.

🔮இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பிவி சிந்து தோல்வி.

♻♻♻♻♻♻♻♻

*தொகுப்பு*

T.,தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H