ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை:அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Sunday, 11 August 2019

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை:அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🌹👉தற்போது ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.கோபி அருகே ஏளூரில் துணை மின் நிலையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்
 👉இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:-

👉தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு, சிறப்பு தேர்விற்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். சிறப்பு ஆசிரியர் பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் கவுன்சலிங் நடத்தப்படும்
👉தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். பாலிடெக்னிக் கல்லூரிக்கும் பேராசிரியர் தேர்வு நடத்தப்படும்
👉மேலும் ஆன்லைன் மூலமாக எந்த தவறும் நடைபெறாத வகையில் ஆசிரியர் பணி தேர்வு நடக்கும்
👉கணினி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு இந்த வார இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறை  உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர்
👉தற்போது ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லாததால், கடந்த 2012-13ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க இயலாத நிலை உள்ளது. 16,500  ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை குறைந்தது
👉இந்த ஆண்டுதான் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி நிரப்பப்படும்
👉ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிகளில்  கொடியேற்ற மட்டுமே அனுமதி. வகுப்புகள் நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹கல்வி உதவி தொகைக்கான, தேசிய திறனறிதல் தேர்வு தேதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது

🌹👉நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்,மேல்நிலையில், பிளஸ் 2 வரையிலும், அதன்பின், பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், கல்வி உதவி தொகை பெறலாம்.இதை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சிகவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வழங்குகிறது.
👉இந்தகல்வி உதவி தொகை, ஒவ்வொரு மாநில மாணவர்களுக்கும், தகுதிதேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தகுதி தேர்வை எழுதலாம். நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய திறனறிதல் தேர்வுக்கான தேதியை, என்.சி.இ.ஆர்.டி., நேற்று அறிவித்தது.
👉அதன்படி, மாநில அளவிலான முதற் கட்ட தகுதி தேர்வு, நவ., 3ல் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் இரண்டாம் கட்ட தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், அடுத்தாண்டு, மே, 10ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad