இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..... நான் மழை பேசுகிறேன்... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Sunday, 11 August 2019

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..... நான் மழை பேசுகிறேன்...

நான் குடியிருந்த ஏரி குளம் குட்டை அனைத்தையும் மனிதர்களாகிய நீங்கள் உங்கள் குடியிருப்புகளாகவும் ஆக்கிரமிப்புகளாகவும் தங்களின்  விருப்பங்கள் போல மாற்றிக் கொண்டீர்கள்.
எனது வழித்தடத்திலும் தங்களின் தலையீடு தன்னிகரற்ற முறையில் சிறப்பாக சீரழித்தீர்கள்....

தங்களின் இடத்தை வேறு யாராவது ஆக்கிரமித்தாலோ அல்லது உங்களுக்கு அங்கு உரிமையில்லை என்று கூறினால் தாங்கள் என்ன செய்வீர்கள். கோபத்தில் அடிதடி செய்தோ அல்லது வழக்காடியோ பெறுவீர்கள். நான் சமூக ஆர்வலர்கள் மூலம் தங்களோடு கூறிப் பார்த்தேன் பிறகு வழக்காடிப்பார்த்தேன்... எனது ஆதங்கம் தங்களுக்கு புரியவில்லை. என்னவென்றால் நான் இல்லை என்றால் நீங்களும் இல்லை என்று... பிறகு சிறிய அளவில் கரையோரம் சேதங்கள் தந்தால் புரிந்துகொள்வீர்கள் என்று பார்த்தேன், நீங்கள் அதை சட்டை செய்யவில்லை.

மீண்டும் கரைகளை உடைத்து வழித்தடத்தில் உள்ள வீடுகளில் புகுந்தால் புரியும் என்று நினைத்தேன் அதுவும் தோல்வியில் முடிந்தது.

இதில் நீங்கள் ஒருபடி மேலே சென்று என்னை அன்போடு அழைத்து உங்களுக்கு வாழ்வை தர வேண்டும் மரங்களை கணக்கு வழக்கில்லாமல் வெட்டி தள்ளினீர்கள். எனக்கு சற்று கோபம் வந்தது அதுவும் எதனால் என்றால் நானாவது உங்களுக்கு தாகத்தையும்  உணவுக்கும் பயன்படுகிறேன். ஆனால் மரங்கள் உங்களுக்கு இன்னொரு தாயாக இருப்பது தெரிந்தும் இப்படி வெட்டி வீழ்த்தினால் என்ன செய்வது.

தாய் என்னால் எப்படி என கேள்வி எழுகிறதல்லவா. கூறுகிறேன் கேளுங்கள்.


உங்கள் அம்மா உங்களுக்கு உயிர் தந்து நிழல் போல காத்து உணவூட்டி வளர்க்கிறார். அதேபோல் மரம் செடி கொடி இவைகள் என்னை அழைத்து என்னை பயன்படுத்தி உணவாக (நெல் மற்றும் பயிர்கள், கனிகள்) நிழலாக விறகாக இப்படி தாயை விட ஒருபடி மேலாக தங்களை காக்கும் மரங்களை வெட்டினால் நான் எப்படி பொருத்துக்கொள்வேன்.

ஆக புயலாக வந்தால் அப்படியாவது புரிந்து கொள்வீர்கள் என நம்பி நான் மீண்டும் முட்டாளாக்கப்பட்டேன். இனி தங்களுக்கு புரியவைக்க வாய்ப்பில்லை நாமாக ஏதேனும் செய்தால் தவிர ஒன்றும் செய்ய இயலாது என்பதை புரிந்துகொண்டேன்‌. ஆக தற்போது பருவமழையின் வந்த நான் எனது வழித்தடங்களில் செல்ல முடிவு செய்துவிட்டேன். ஆனாலும் முழுவதுமான எனது தடங்களில் செல்லவில்லை. தற்போது இருக்கும் பாதைகளில் சற்று ஆக்ரோசமாக செல்வதை பார்த்தாவது இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள் என்று இருகரம் கூப்பி கேட்கிறேன்.

தவறினால் மீண்டும் இதைவிட சற்று பெரிய அளவில் எனது ஆதங்கம் கோபமாக வெளிப்படும்....

உங்கள் சந்ததிகள் அனைவரையும்  நீங்கள் பார்க்கிறீர்களோ இல்லையோ நான் அனைவரையும் காத்து வருகிறேன். இது பூமி தோன்றிய நாள் முதல் உங்கள் முன்னைய  முன்னோர்கள் முதல் நீங்கள் வரை.


இனியும் எனது பயணம் தொடரும் தயவுசெய்து மரங்களையும் எனது பாதைகள் மற்றும் குடியிருப்புகளை மீண்டும் எனக்கே வழங்கிடுங்கள்.... கண்ணீர் மல்க கேட்கிறேன்.

நான் இப்படி கேட்பதால் என்னை குறைவாக எடைபோட வேண்டாம். நான் உச்சகட்ட கோபம் அடைந்தால் இங்கு எந்த உயிரினமும் வாழமுடியாது. புரிந்துகொள்ளுங்கள்... உங்கள் மீது உள்ள அக்கரையில் பேசுகிறேன்.....🙏🙏🙏

ஆக்கம்
வீரமணி...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad