இன்றைய சிந்தனை.(09.10.2019....) ..அன்பு இருக்கும் இடத்தில்தான்..'' - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Wednesday, 9 October 2019

இன்றைய சிந்தனை.(09.10.2019....) ..அன்பு இருக்கும் இடத்தில்தான்..''

இன்றைய சிந்தனை.(09.10.2019....)
..................................

'அன்பு இருக்கும் இடத்தில்தான்..''
...................................

பண்புகளில் தலைமையிடம் வகிப்பது, கோபம் கொள்ளாமல் அன்பால் எவரையும் அணைத்தலே ஆகும்..

‘சாதித்துக் காட்ட வேண்டும்’ என்ற தணியாத வேகமும், தளராத உழைப்பும், கல்வியும், செல்வமும் வாய்க்கப் பெற்றிருந்த ஒருவரால் சமுதாயத்தில் உயர்ந்த மனிதராக உருவாக முடிய வில்லை.

ஒருவரின் நிறுவனத்தில் பணி புரியும் பணியாளரிடம் கடுஞ்சொல்லால் அவர்களை வசைபாடாமல் அன்பாக நடத்த வேண்டும்.. எப்போதும் எரிந்த படியே ,பணியாளர்களை திட்டிக் கொண்டே இருக்க கூடாது..இதனால் பணியாளர்கள் எவருமே பொருந்தி இருந்து பணி புரிய வில்லை என்றால் அவருடைய குடும்பத்திலும் அமைதி நிலவாது.

செல்வம், கல்வி, உழைப்பு அனைத்தும் இருந்தும் அவரிடம் அன்பு, நிதானம், அரவணைக்கும் தன்மை மூன்றும் இல்லாமல் இருந்தால்,அவரது
நிறுவனம் புகழ் வனமாக எப்படிப் பூத்துப் பொலியும்?

வசதி வாய்ப்புகள் மட்டுமே ஒருவரை வாழ்வாங்கு வாழும் நிலையில் வைத்து விடாது. மற்றவர் களிடம்அன்பாக இருந்தால்தான் வெற்றி தேடி வரும்..

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தை உடன் வசித்து வந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து, ‘ உள்ளே வரலாமா ?‘ என்று கேட்டனர்.

''வாருங்கள்’ என்றார் தந்தை.

நாங்கள் மூவரும் ஒன்றாக வர முடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர்  வெற்றி.இவர் பெயர் அன்பு..

எங்கள் மூவரில் ஒருவர்தான் ஒரு வீட்டிற்குள் செல்ல முடியும்…

எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ‘ ''வெற்றி''யை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி அடையலாம்’ என்றார்.

ஆனால் குமரனோ, "அப்பா'' பணத்தை''யே உள்ளே அழைக்கலாம். பணம் சேர்ந்து விட்டால் எல்லாவற்றிலும். வெற்றி பெறலாம். மற்றும், அனைத்தையும் வாங்கலாம்’ என்றான்.

ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…
''அன்பை''யே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.பின் மூவரும், ”அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.உடன் குமரனின் அம்மா,, ''அன்பை மட்டும் தானே'' உள்ளே அழைத்தோம்’ என்றார்.

அன்பு சொன்னது,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியோ அழைத்து இருந்தால்.. மற்ற இருவரும் வெளியே நின்று இருந்து இருப்போம்.

ஆனால் ''அன்பான'' என்னை வரச் சொன்னதால்..
நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’.

ஆம்.,நண்பர்களே..,

அன்பு உள்ளம் இருந்தால்,..நம் வாழ்வில் வெற்றியும்,
தேவையான வசதிகளும் தானாகவே வந்து விடும்.அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள்'' ஆவர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad