காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் 18-10-2019 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 18 October 2019

காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் 18-10-2019 :


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

இன்றையதிருக்குறள்
குறள்எண்- 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
 ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

மு.வ உரை:

முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

கருணாநிதி  உரை:

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

சாலமன் பாப்பையா உரை:

முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் உள்ளது என்று எண்ணுங்கள். எதையும் சாதிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
 - அப்துல் கலாம்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழிமற்றும்விளக்கம்
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது
விளக்கம் :
மகாபாரதத்தில் அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒரு தடவை கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பற்ற தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால் அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1. Barbar - முடி திருத்துபவர்
2. Carpenter - தச்சர்
3. Cashier - காசாளர்
4. Coolie - கூலித் தொழிலாளி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1)தமிழகத்தில் முதல் அனல்மின் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
 நெய்வேலி

2)24 மணி நேரத்தில் 3 அடி வளரக்கூடிய தாவரம் எது?
 மூங்கில்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1.பிடி இல்லாத குடையைத் தொட முடியவில்லை. அது என்ன?
வானம்

2.மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள். அது என்ன?
நட்சத்திரம்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
முருங்கைக்காய்

🍠 முருங்கைக் காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். இதன் உயிரியல் பெயர் முருங்கா ஓலிஃபேரா.

🍠 முருங்கைக்காய் மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.


🍠 முருக்கக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்பட்டது.

தற்போது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

மரவெட்டியின் வேண்டுதல்

மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.

அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது. உடனே கடவுளிடம் வேண்டினான். கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன் என்றான். வேண்டிக்கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்புபோல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன் என மீண்டும் வேண்டினான். இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான். ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன் என்றான். மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான். இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது. என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன் என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான்.


உடனே அவன், உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன் என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான். விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான். பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறிவிடுகின்றன.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

 🔮இலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது.

🔮விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களை நாசா எடுத்தது.

🔮விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை.

🔮இலங்கை யாழ்ப்பணம் சிறையில் இருந்த 11 தமிழக மீனவர்கள் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை.

 🔮நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை


 🔮குத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்

HEADLINES

🔮Delhi-Kabul SpiceJet flight intercepted by Pakistan jets in September.

🔮820 million people facing food shortage while 1 billion tonne food wasted every year: UN secretary general .

🔮Alliance Air to reconnect Chennai with Jaffna from Thursday.

🔮Teachers should provide equal attention to boys and girls: NCERT tells pre-schools.


🔮Roger Federer to play French Open next year.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H