தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Thursday, 10 October 2019

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் :

வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கு நடத்தப்படும் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறாவர்களுக்கு, பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சட்டப் படிப்பு முடித்த பின், வழக்கறிஞராக பயிற்சி செய்ய, பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு பதிவு செய்த பின், இரண்டு ஆண்டுகளுக்குள், பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்ய முடியாது.தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் வரை, வழக்கறிஞர் தொழில் புரிவதை, பார் கவுன்சில் நிறுத்தி வைக்கும்.பார் கவுன்சில் ஆவணங்களை பரிசீலித்த வகையில், ௨௦௧௦ ஜூலைக்கு பின் பதிவு செய்தவர்களில், ௧,௫௪௭ பேர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதது தெரிய வந்துள்ளது.
தேர்ச்சி பெறாதவர்களின் பட்டியல், பார் கவுன்சில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.வழக்கறிஞர் சங்கங்களுக்கும், பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக, பார் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான ஆதாரங்களை உடனடியாக அனுப்பும்படி, இறுதி நோட்டீசும் பிறப்பித்துள்ளது.அடுத்த கட்ட நடவடிக்கையாக, இவர்கள் வழக்கறிஞராக தொழில் புரிவதை, பார் கவுன்சில் நிறுத்தி வைக்கும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், தடையை பார் கவுன்சில் நீக்கி விடும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad