ஆசிரியர்களின் சுயசிந்தனை திறனை இழக்க செய்யும் கல்வி வலைத்தளங்கள்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Monday, 14 October 2019

ஆசிரியர்களின் சுயசிந்தனை திறனை இழக்க செய்யும் கல்வி வலைத்தளங்கள்:

 ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் வகுப்பறை சூழலுக்கும் ஏற்ப பாடம் நடத்திக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆசிரியர் வலைத்தளங்களில் காலை வழிபாடு கூட்டங்கள் என்றும், பாடங்களுக்கு நோட்ஸ் ஆப் லெசன்கள் என்றும் வளறறி மதிப்பீடு தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் தயாரித்து அனுப்புவதும் கடின வார்த்தைகள் எளிய வார்த்தைகள் முக்கிய வார்த்தைகள் போன்ற மதிப்பீட்டு செயல்களை ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு ஐந்தாம் ஐந்தாம் வகுப்பிற்கு என 12 ஆம் வகுப்புவரை ஆங்கிலத்திற்கு தமிழுக்கு என்று ஒவ்வொரு பாடமாக யாரோ ஒருவர் தயாரித்து அதை வலைதளங்களில் பதிவிட்டு,அதனை பி4@ வலைதளங்களும் அதை போட்டி போட்டுக் கொண்டு பகிர்ந்து ஒரு சிலரின் சிந்தனையை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்து விடுகின்றன. இது எல்லா ஆசிரியர்களும் தன் சூழலுக்கேற்ற தன் மாணவனுக்கு ஏற்ப சிந்தித்து செயலாற்றுவதை தடுக்கிறது என்பதை எல்லோரும் உணர மறுக்கிறார்கள்.... அதுமட்டுமல்ல சில பதிவேடுகள் என்று இவர்களுக்கு மனதில் தோன்றினார் போல் எந்தவித கல்வித்துறையின் வழிகாட்டுதலும் இல்லாமல் மாதிரி என பதிவிட்டு அதிகாரிகளும் இதுதான் என நினைத்து இதுபோன்ற செய்யலாமே அதுபோன்று செய்யலாமே என்று அந்த வலைதளத்தில் வந்துள்ளது பார் இந்த வலைதளத்தில் வந்துள்ளது   பார் என்று அனைத்து ஆசிரியர்களுக்கும் நெருக்கடி கொடுத்து வருவதாக அறிகிறோம்....
எனவே உங்கள் திறமைகளை உங்கள் வகுப்பறையில் செயல்படுத்துங்கள் அதனை தினந்தோறும் வலைதளங்களில் வெளியிட்டு அதையே எல்லோரும் கடைபிடிக்கக் கூடிய ஒரு நிலையை மாற்றினால் வருங்கால சமுதாயம் மனப்பாட சமுதாயமாக மாறிப்போகும் அல்லது காப்பி பேஸ்ட் சமுதாயமாக மாறிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.....

 ஆசிரியர்களே வலைதளங்களில் வரும் அனைத்தும் விருப்பம்போல்தயாரிக்கப்பட்டு. துறைசார்ந்த வழிகாட்டுதல் இன்றி வருபவை.தங்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் மாணவர்களுக்கு உகந்ததாக தாங்களே சிந்தித்து பயன்படுத்தவும் இவற்றை பார்த்துவிட்டு ஒரு கைடு லைன் ஆக வைத்துகொள்ளலாம் அதிகாரிகளும் வலைதளத்தில் வந்துவிட்டால் அதுவே சரியானது என அத்தனை ஆசிரியர்களையும் அமல்படுத்த சொல்வதை நிறுத்த வேண்டு கிறோம். சுயமாக சிந்தித்து போதிப்போம் ..


நிர்வாகம் செய்வோம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad