குழந்தைகளின் மாமா - நேரு பற்றிய சுவாரசிய வாழ்க்கை வரலாறு தொகுப்பு! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 14 November 2019

குழந்தைகளின் மாமா - நேரு பற்றிய சுவாரசிய வாழ்க்கை வரலாறு தொகுப்பு!


IMG_ORG_1573659298467


இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமைகளுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. 1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர்.


Nehru 2019: குழந்தைகளின் மாமா நேரு பற்றிய சுவாரசிய தொகுப்பு!
இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமைகளுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. 1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர்.

1889 ஆம் ஆண்டு, நவம்பர் 14 ஆம் தேதி, அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு ஜவஹர்லால் நேரு மகனாகப் பிறந்தார்.


நேருவின் வாழ்க்கை

நேரு தனது இளம் வயதில், தந்தையின் பேனாக்கள் இரண்டு ஒரே மாதிரியே இருந்தபடியால் ஒன்றை தான் எடுத்துக் கொண்டார். பேனாவைக் காணவில்லை என்று தேடிய மோதிலால் நேரு, உண்மை தெரிந்து நேருவின் முதுகு பழுக்கிற அளவுக்குக் கவனித்தார். ‘நேர்மையாக வராத எந்தப் பொருளையும் நமக்கானது ஆக்கிக்கொள்ளக் கூடாது!' என்கிற பாடத்தை வாழ்நாள் முழுக்க அந்தச் சம்பவத்தால் கடைபிடித்தேன்’ என்பது நேருவின் பதிவு.

1912 ஆம் ஆண்டு லண்டனில் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பிரிட்டனில் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் தலைமையின் கீழ் செயல்பட்டார். 1913 ஆம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு (Civil rights Campaign) நிதி வசூலித்துக் கொடுத்தார்.

1916 ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் நேரு முதன் முறையாகக் காந்தியைச் சந்தித்தார். இது காந்தி-நேரு இருவருக்குமான இணைபிரியா தோழமையின் தொடக்கமாக அமைந்தது.



1917-ம் ஆண்டு அன்னி பெசன்ட் துவங்கிய தன்னாட்சி இயக்கத்தின் செயலாளர் ஆனார்.‘தி இன்டிபென்டன்ட்’ இதழை தன்னுடைய தந்தை ,மோதிலால் நேருவுடன் இணைந்து 1919-ல் ஆரம்பித்தார்.

நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938-ம் ஆண்டு நேரு துவங்கி நடத்தினார்.

1948-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் உறுப்பினராகக் கொண்டு காங்கிரஸ் கட்சி அமைத்த ‘ஜேவிபி’ குழுவின் மொழிவாரி மாகாண உருவாக் கத்தை ஆதரிக்கவில்லை.

பிரிவினையை மதரீதியாக நிகழ்த்தி தேசம் துண்டாடப்பட்டதால் மொழிவாரி மாநிலங்களுக்கு நேரு அனுமதி தர மறுத்தார். 379 அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையே நேருவை இந்திய விடுதலைப் போராட்டத்துக்குள் இழுத்தது.



தந்தையை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய பெருமை நேருவை சேரும். “மோதிலால் நேரு இந்திய விடுதலைப் போரில் ஈடுபடக்காரணம் அவர் மகன் மீதான அன்பே. நேருவின் மீதான அன்பே தேசப் போராட்டத்தில் அவரை ஈடுபடுத்தியிருக்கிறது. “என்றார் காந்தியடிகள்.

1920 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்குத் நேரு தலைமை தாங்கினார். அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என 1921 ஆம் ஆண்டு நேரு கைது செய்யப்பட்டார். நேருவின் தந்தையார் மற்றும் சி.ஆர். தாஸ் தொடங்கிய ‘சுயராஜ்ய கட்சி’ யில் நேரு சேராமல், காந்தியுடனே பணியாற்றினார். நேரு, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து பிற விடுதலை பெற்ற நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்பினார்.

1948-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் உறுப்பினராகக் கொண்டு காங்கிரஸ் கட்சி அமைத்த ‘ஜேவிபி’ குழுவின் மொழிவாரி மாகாண உருவாக் கத்தை ஆதரிக்கவில்லை.



பிரிவினையை மதரீதியாக நிகழ்த்தி தேசம் துண்டாடப்பட்டதால் மொழிவாரி மாநிலங்களுக்கு நேரு அனுமதி தர மறுத்தார். நேருவின் தாய்மொழி இந்துஸ்தானி. அகில இந்திய வானொலியின்உரைகள் அதிக சமஸ்க்ருத வார்த்தைகள் கலந்த ஹிந்தியில் மேற்கொள்ளப்பட்ட பொழுது “எனக்கு இந்த உரைகள் புரியவே இல்லை!” என்று பிரதமராக இருந்த நேரு புலம்பினார்.

சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாகாணமான ஆந்திரா உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி, உண்ணாவிரதமிருந்து பொட்டி ஸ்ரீராமுலு 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிர் நீத்தார். பொட்டி ஸ்ரீராமுலுவின் மறைவுக்கு மூன்று தினங்களுக்குப் பின் ஆந்திர மாநிலம் அமைக்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நேரு அறிவித்தார்.

நேருவின் தனிப்பட்ட வாழக்கை

குதிரை ஏற்றப் பயிற்சி, நீச்சல் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஐரோப்பாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கு பெற்றுள்ளார்.

குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவர். உலகப்போர் சமயத்தில் பெரும்பாலான விலங்குகளை இழந்த யூனோ விலங்கியல் பூங்காவிற்குஜப்பான் குழந்தைகளைமகிழ்விப்பதற்காகஒரு யானைக் குட்டியை பரிசாக அளித்தார்.

1947ல் வடமேற்கு மாகாணங்களில் ஒரு முறையும், மஹாராஷ்ட்ராவில் 1951,1956,1961 ஆகிய மூன்று வருடங்களிலும் நேரு மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H