School Morning Prayer Activities - 19.11.2019 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 19 November 2019

School Morning Prayer Activities - 19.11.2019 :

_20180701_211806

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.11.19

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

விளக்கம்:

அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

பழமொழி

The finest lawn soonest stains.

 காய்ந்த  மரமே கல்லடி படும்

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்குபவரே வெற்றி வாகை சூடுகிறார். அதை சரியாக கையாள்பவரே நிரந்தர வெற்றியாளர் ஆகிறார்.
----- பெர்னாட்ஷா

பொது அறிவு

இன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம்

1. இந்தியாவுடன் எந்த நாடு அதிக நீளத்திற்கு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது?

 வங்காளதேசம்.

2.ஆட்சி மாற்றம் இல்லாத ஒரே நாடு எது?

 மெக்சிகோ.

English words & meanings

Joules - a SI unit of work and energy. ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகுகள் சார்ந்த அலகு ஆகும்.ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரால் குறிக்கப்படுகிறது.

Jubilant - expressing great happiness and triumph. மகிழ்ச்சிகொண்டு ஆரவாரிக்கிற.

ஆரோக்ய வாழ்வு

லாவெண்டர் எண்ணெய் மன இறுக்கத்தை சரிசெய்யும். இதனை குளிக்கும் நீரில் 10 சொட்டு கலந்து குளித்தால் தலைவலி நீங்கும்.

Some important  abbreviations for students

chap. = chapter

chem. = chemical

நீதிக்கதை

ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.

அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.

மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.

அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.

விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.

இன்றைய செய்திகள்

19.11.19

* நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் ஒரு மர்மமான முறையில் செயல்பட்டு வருகிறது என்பதை கண்டறிந்துள்ளது.





*உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் கொலீஜியம் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற நீதிபதியுமான ஆர்.பானுமதி இடம்பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு கொலீஜியம் குழுவில் இடம்பிடிக்கும் பெண் நீதிபதியும் பானுமதிதான்.

* இந்தியாவுக்கு 3 நாட்கள் பயணமாக வருகை தந்துள்ள மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

* பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில்  நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான தேசிய வில்வித்தை போட்டியில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரா்கள் முகமது ஷமி, மயங்க் அகா்வால் ஆகியோா் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளனா். பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் ஷமி முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளாா்.

Today's Headlines

 🌸  NASAs Curiosity rover has found that oxygen is functioning in a mysterious way in Mars.

 🌸The  Supreme Court  Judge and Tamilian R. Banumathi became the part of the Collegium Committee which nominates Supreme Court and High Court judges .  Banumathi is also the only woman judge to be inducted into the Collegium Committee after 13 years.

 🌸Microsoft's co-founder Billgates visited  India for a  three-day trip met Prime Minister Narendra Modi.

 🌸 7th grade student from Mamallapuram won silver medal  National Archery Competition held in Kariyal, Punjab among the CBSE schools.

🌸Indian captains Mohammad Shami and Mayank Agwal have made good progress in the ICC Test rankings.  Shami is ranked in the top 10 of bowlers' rankings.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H