பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்களின் கணக்கில் இருந்து
பணம் சுரண்டும் ஹேக்கர்கள்' குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வங்கி
பணப்பரிமாற்றத்திற்கு பல்வேறு செயலிகள் புதிது, புதிதாக பிறக்கின்றன.
'பிம், கூகுள் பே, போன்பே, பேடிஎம்., ரேசர் பே, மொபிகுவிக், பாக்கெட்ஸ்,
ஹாட்பார்ம்' உள்ளிட்ட செயலிகள் இவற்றில் சில.இந்த செயலிகள் மூலம் ஆன்லைன்
வழியில் நொடியில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சமீப காலமாக சில செயலிகளை
பயன்படுத்துவோரின் வங்கி கணக்கிலிருந்து பொருட்கள் வாங்கியதாக பணம்
பிடித்தம் செய்யப்படுகிறது.
பழநியை சேர்ந்த பெயர் கூற விரும்பாத பெண் அரசு ஊழியர் ஒருவர் திண்டுக்கல்
எஸ்.பி., அலுவலககத்தில், கூகுள் பே மூலம் தன்னுடைய கணக்கிலிருந்து ரூ.16
ஆயிரத்து 300 எடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார்.அவர் கூறும்போது,
''பழநியில் உள்ள பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். 'கூகுள்பே'
செயலியில் நான் யாருக்கும் பணம் அனுப்பாத நிலையில் திடீரென பணம்
எடுக்கப்பட்டுள்ளது.
வங்கியில் சென்று கேட்டால் எதுவும் தெரியாது என்கின்றனர். இதே போல் பல அரசு
ஊழியர்களின் கணக்கில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை எடுக்கப்பட்டதாக
வங்கியில் புகார் உள்ளது'' என்றார். திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார்
விசாரணையில் இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...