அரசுப்பள்ளியை தத்தெடுத்து உதவும் காவலர்கள் : குவியும் பாராட்டு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 19 January 2020

அரசுப்பள்ளியை தத்தெடுத்து உதவும் காவலர்கள் : குவியும் பாராட்டு :

சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்து மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை திருமங்கலத்தில் அரசுப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆரம்பப்பள்ளியாக 1966 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 
அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 135 மாணவர்கள் 8 ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அரசுப்பள்ளியை தத்தெடுக்கும் புது யோசனையை சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன் வைத்தார். அதன்படி அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி மற்றும் காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் கனவை நனவாக்கினர். 
குறிப்பிட்ட அரசுப்பள்ளியை தத்தெடுத்து மாணவர்களின் சிறு சிறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது, போலீசார் மேசைகள், நாற்காலிகள், தட்டுகள், பீரோ ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும், ஏழை மாணவர்கள் சிறந்த வசதிகளை பெறுவதற்காக நிதி திரட்டுவதன் மூலம் பள்ளி கட்டிடத்தின் மறுசீரமைப்பு பணிகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு காவல் ஆய்வாளர் ரவி அளித்த பேட்டியில், "மாணவர்களுடன் கலந்துரையாட இது ஒரு நல்ல வாய்ப்பு. மக்களும் குழந்தைகளும் எங்களை கண்டு பயப்படத்தேவையில்லை. 
அனைவரும் சட்டம் மற்றும் ஒழுங்கை கடைபிடிக்க இது உதவும்" எனத் தெரிவித்தார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஷ்வரி கூறுகையில், " நாங்கள் கோரிய சிறிய கோரிக்கைகளை கூட போலீசார் பூர்த்தி செய்கின்றனர். தற்போது சிறந்த வசதிகளுடன், மாணவர்கள் படிப்பில் சிறப்பாக கவனம் செலுத்த முடிகிறது. 
பள்ளிக்கு விரைவில் புதிய நூலகம் ஒன்று வர உள்ளது" எனத் தெரிவித்தார். முன்னதாக, சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு பள்ளி வளாகத்தில் பாட்டில்களை உடைத்துவிட்டு செல்லும் அவலநிலை தொடர்ந்ததாகவும் சமூக விரோத சக்திகளுக்கு இது ஒரு இடமாக இருந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.


Guards helping to adopt a government school:Accumulation and appreciation 


Acclaimed police are praising the police for helping the students with the adoption of a government school. Government school is functioning in Thirumangalam, Chennai. The school was started in 1966 as a primary school. Since 2002, it has been converted into a middle school. It was subsequently upgraded to a high school on July 18, 2017. 

The school currently has 135 teachers and 8 teachers. In this context, the new idea of ​​adoption of the Government School was put before the Commissioner of Chennai, AK Viswanathan. Accordingly, Anna Nagar Deputy Commissioner Muthusamy and Police Inspector Ravi made the dream come true. 

Students adopt a particular government school and meet their small demands. That is, the police have bought desks, chairs, plates and bureau. They are also undertaking renovations of the school building by raising funds to provide better facilities for the poor students. 

In an interview with The Times of India, the police inspector Ravi said, "This is a good opportunity to discuss with the students. People and children are not afraid of us. It will help all to abide by the law and order." Maheshwari, the headmaster of the school, said, 

"The police are meeting even the smallest demands that we have requested. With the best facilities available now, the students will be able to concentrate on studying. The school will soon have a new library." Earlier, residents in the area reported that some of the anti-social elements continued to drink alcohol and break bottles on the school premises, and that this was a place for anti-social forces.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H