பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 15 February 2020

பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.

🌴🌲🌳🌴🌲🌱🌳🏃‍♂🌳🌴

பத்து  வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?

1980 களில் தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...

செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...

குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...
வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...

சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...

ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...

ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...

பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.

*மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...

1990 களில்
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...

ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி, அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...

கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...

இரு சக்கர வாகனங்கள் நடுத்தர வர்க்கத்தினரும் வாங்ககூடிய அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிளில் பயணித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.

ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...

சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...

சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...

மேகி வந்தது... பழைய சாதம், இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...

ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...

ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராப்ளம் ஆனது...

வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...

ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...

ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...

வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...

ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...

*தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...

இன்னும் பல...

2000 களில்
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.

மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்கள்... இந்த முறை மருந்து கம்பெனிக்காரன் கட்டுமான பொருட்களையே தயாரிக்கவே ஆரம்பிச்சுட்டான் அவனோட அடுத்த கட்டிடங்களுக்கு...

டிஜிட்டல் கேமராக்கள் வந்தது... பல பிலிம் நிறுவனங்களும், ஸ்டுடியோக்களும் கடையை காலிசெய்தனர்.

குடிநீர் பாட்டில் வந்தது... ஏங்க கொஞ்சம் குடிக்க தண்ணிக்குடுங்க என்ற வார்த்தைகள் காணாமல்போனது...

பட்டன் வச்ச செங்கல் செல்ஃபோன் போயி சிறுவடிவ செல்ஃபோன் வரை வந்தது லேண்ட்லைன் ஃபோன், பேஜர்களுக்கு பேஜார் ஆனது. விபத்துக்கள் அதிகம் ஆகின... ஹெல்மெட் வியாபாரம் பட்டைய கிளப்பின...

தெருவுக்கு தெரு தார்சாலை... ஊர்சாலைகள் நான்கு வழிபாதையாக மாற்றப்பட்டது... நன்கு மடங்கு மரங்கள் அழிக்கப்பட்டது...

வெப்பம் அதிகரித்தது ஆர்டிக் பனி உருக ஆரம்பித்தது...

*போஸ்ட்க்கு இருபது முப்பது மருந்து கடைகள் இருந்தது...

2010 லிருந்து
உங்களுக்கே தெரிந்திருக்கும்.... தெரியலைனா தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு...

நாம் இப்பவும் ஆர்டிக் பனி உறைஞ்சு வந்தா என்ன அதான் ஓசோன்ல ஓட்டை இருக்கே அதுவழியா தண்ணி வெளியே போயிடும்யானு மொட்டை தலைக்கும் மொழங்கலுக்கும் சம்மந்தமே இல்லாம முடிச்சிபோட்டுக்கிட்டு ஜாலியா இருக்கோம்.

*வீட்டுக்கு வீடு மருந்து கடை தொடங்கும் அளவுக்கு மருந்துகள் உள்ளது.

ஆக இந்த பத்து வருடம் என்பது வளர்ச்சி தரும் கால அளவுனு தீர்மானிச்சா... அது முற்றிலும் தவறு... அடுத்த பத்து வருடத்தில் அதாவது 2020 லிருந்து 2030 க்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விற்பனைக்கு வந்துவிடும். ஏற்கனவே சீனாவில் வியாபாரம் ஆக தொடங்கி விட்டது

இப்போதுதாவது விழித்துக்கொள் நண்பா..

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H