அரிய பிறவியெடுத்து பிறர் அறிய வாழ்வதே பேரானந்தம்
வாழ்வின் முழுமை
செய்யும் செயலில் தொடங்கி
ஒவ்வொன்றாய் வளையமிட்டுக்கொண்டே
தொடர்ந்திடும்
அடுத்தவர் விமர்சனத்தின் வாயில் விழாத நாள் பெரும்பாலும் வாய்க்காது
எப்போது கீழ்விழுவானென்றே வேவு பார்த்து உன் நன்மதிப்பை காவு வாங்க அலைவோர் இங்கே ஏராளம்
கடிவாள குதிரையாய் மனஞ்செலுத்து
சோர்ந்து போகாதே அதற்கு அலுத்து
இயன்றமட்டும் ஈகை செய்
வாழும்போதே காணும் சொர்க்கம்
இதுவே மெய்
இனிப்பு வார்த்தைகளோடு வலம் வா
இரண்டு கைகளிலும் நிறைய தா
பத்தோடு பதினொன்றாகாதே
எல்லாரும் செல்லும் வழி செல்லரித்த வழி
பண்பட்ட பாதை சமைத்து கண்டிடு நல்வழி
நெஞ்சில் பாரமிருப்பினும்
ஈரம் குறையாதிரு
இனிக்கும் வெல்லமாகவே இருந்திடினும் தீயன தேடாதிரு
இவ்வுலகு
எப்போதும் உன்னையே கவனிக்கும்
கவனம் கொள்
கயமை கொல்
நேர்மையின் நீட்சியாய் அமையட்டும் உன் நடத்தை
எப்போதும் விட்டுத்தராதே உனக்கென இருக்கும் இடத்தை
பற்றி வரட்டும் முடிந்தால் இச்சமூகம் உனது தடத்தை....
சீனி.தனஞ்செழியன்
வாழ்வின் முழுமை
செய்யும் செயலில் தொடங்கி
ஒவ்வொன்றாய் வளையமிட்டுக்கொண்டே
தொடர்ந்திடும்
அடுத்தவர் விமர்சனத்தின் வாயில் விழாத நாள் பெரும்பாலும் வாய்க்காது
எப்போது கீழ்விழுவானென்றே வேவு பார்த்து உன் நன்மதிப்பை காவு வாங்க அலைவோர் இங்கே ஏராளம்
கடிவாள குதிரையாய் மனஞ்செலுத்து
சோர்ந்து போகாதே அதற்கு அலுத்து
இயன்றமட்டும் ஈகை செய்
வாழும்போதே காணும் சொர்க்கம்
இதுவே மெய்
இனிப்பு வார்த்தைகளோடு வலம் வா
இரண்டு கைகளிலும் நிறைய தா
பத்தோடு பதினொன்றாகாதே
எல்லாரும் செல்லும் வழி செல்லரித்த வழி
பண்பட்ட பாதை சமைத்து கண்டிடு நல்வழி
நெஞ்சில் பாரமிருப்பினும்
ஈரம் குறையாதிரு
இனிக்கும் வெல்லமாகவே இருந்திடினும் தீயன தேடாதிரு
இவ்வுலகு
எப்போதும் உன்னையே கவனிக்கும்
கவனம் கொள்
கயமை கொல்
நேர்மையின் நீட்சியாய் அமையட்டும் உன் நடத்தை
எப்போதும் விட்டுத்தராதே உனக்கென இருக்கும் இடத்தை
பற்றி வரட்டும் முடிந்தால் இச்சமூகம் உனது தடத்தை....
சீனி.தனஞ்செழியன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...