Android Phone-ல் SD Card-ஐ RAM ஆக மாற்றி போனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Android Phone-ல் SD Card-ஐ RAM ஆக மாற்றி போனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

இன்று Android ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருமே எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை ஒன்று தான், தங்களுடைய ஸ்மார்ட் போன் மெதுவாக செயற்படுவது. இதற்கு முக்கிய காணரமாக நமது Android போனில் இருக்கும் RAM-ஐ கூறலாம். நமது ஸ்மார்ட் போனில் அதிகளவான செயலிகள் காணப்படும் போது, அதற்கேற்ற RAM அளவு நமது போனில் இல்லையாயின் நமது ஸ்மார்ட் போன் மிகவும் மந்தமாகவே செயற்படும்.
இதனால் இன்றைய பதிவில் நமது ஸ்மார்ட் போனில் காணப்படும் SD Card-ஐ எப்படி RAM ஆக உபயோகித்து நமது ஸ்மார்ட் போனை வேகமாக்கி கொள்வது என்று பார்ப்போம்.
SD Card-ஐ RAM ஆக மாற்ற தேவையானவைகள் 
Class 4 அல்லது அதற்கு மேலால SD Card
Root செய்யப்பட்ட Android ஸ்மார்ட் போன்
விண்டோஸ் கணணி
Mini Tool Partition மென்பொருள்
SD Card ரீடர்

உங்களது ஸ்மார்ட் போன் Swapping Support செய்யக்கூடியதாய் இருக்க வேண்டும். இதை பரிசீலித்து பார்க்க இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது விண்டோஸ் கணனியில் நான் மேலே குறிப்பிட்டுள்ள Mini Tool Partition என்ற மென்பொருளை நிறுவி கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது SD Card-ஐ Card Reader மூலம் உங்களது கணனியுடன் இணைத்து கொள்ளுங்கள்.

உங்களது SD Card-ஐ Format செய்யுங்கள்.
பின்னர், Mini Partition Tool-ஐ திறவுங்கள்.
அங்கே உங்களது SD Card-ஐ காணக்கூடியதாய் இருக்கும்.

இப்போது SD Card-ஐ ரைட் கிளிக் செய்து Create Partition என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து RAM-க்கு தேவையான அளவு Memory-யை வழங்குங்கள்.

அடுத்து கீழே நான் குறிப்பிட்டுள்ளவாறு செட்டிங்க்ஸ்-களை தெரிவு செய்யுங்கள்.
Partition > Primary
File System > FAT32

இப்போது Done என்பதை கிளிக் செய்து RAM-க்கு தேவையான மெமரி-ஐ உருவாக்குங்கள்.

அடுத்து மிச்சமாக இருக்கும் மெமரி-யை மீண்டும் Make Partition என்பதை கிளிக் செய்து, அடுத்து கீழே நான் குறிப்பிட்டுள்ளவாறு செட்டிங்க்ஸ்-களை தெரிவு செய்யுங்கள்.

Partition > Primary
File System > EXT2, EXT3 or EXT4 Partition.



குறிப்பு
File System என்பதில் நான் மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு டைப்-ஐ தெரிவு செய்யுங்கள்.
இப்போது Done என்பதை கிளிக் செய்து அடுத்த Partition-ஐ உருவாக்குங்கள்.
இப்போது Link2SD எனும் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவுங்கள்.



நிறுவிய செயலியை திறவுங்கள். இப்போது இந்த செயலி ஆனது Root Permission என்று கேட்கும். அதற்க்கான அனுமதியை வழங்குங்கள்.
இப்போது Link2SD செயலியின் உதவியுடன் நீங்கள் கணணி மூலம் உங்களது SD Card-இல் உருவாக்கிய “.ext” Partition-ஐ (அதாவது RAM-க்கான Partition) உங்களது ஸ்மார்ட் போனின் மெமரி உடன் இணையுங்கள்.
இதுவரை நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் உபயோகிக்கும் SD Card-ஐ RAM-க்கு தேவையான அளவு Memory அளவு உடன் Partition செய்து அதை உங்களது ஸ்மார்ட் போனின் Internal மெமரி உடன் இணைத்து விட்டீர்கள்.
அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனில் புதிதாக சேர்க்கப்பட்ட Internal மெமரி-யை எப்படி RAM மெமரி உடன் இணைப்பது என்று பார்ப்போம்.
இதற்கு Swapper For Root எனும் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.


இப்போது இந்த செயலியை திறந்து அங்கே Swap on Boot என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து Swap File Position என்பதில் Swap File Dimention என்ற ஐ தெரிவு செய்து உருவாக்க வேண்டிய RAM மெமரி-யின் அளவை வழங்குங்கள்.



நீங்கள் வழங்கும் RAM மெமரி-யின் அளவு நீங்கள் கணணி மூலம் உருவாக்கிய Partition-இன் மெமரி அளவை விட குறைவாக இருக்க வேண்டும்.
இறுதியாக Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் ஸ்மார்ட் போனை ஒரு முறை Restart செய்து விட்டு செட்டிங்க்ஸ் சென்று பாருங்கள். அங்கே உங்களது ஸ்மார்ட் போனின் RAM அதிகரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
குறிப்பு
இந்த முறையில் உங்களது ஸ்மார்ட் போனின் RAM-ஐ அதிகரிப்பதானது மிகவும் Advance ஆன ஒன்றாகும். உங்களுக்கு இது பற்றிய முழுமையான தெளிவு இல்லையென்றால் இதை முயற்சிக்காமல் இருப்பதே சிறந்தது.
இந்த பதிவை நான் எழுதியது, Android போன் செட்டிங்க்ஸ்-ஐ ஹேக் செய்து இப்படியும் RAM-ஐ அதிகரித்துக்கொள்ளலாம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே ஆகும். இதை உங்களது சொந்த முயற்சியில் செய்து பாருங்கள்.
செயல்முறைகளின் போது உங்களது ஸ்மார்ட் போனிற்கோ அல்லது SD Card- ற்கோ ஏதாவது பாதிப்பு வந்தால் இந்த பதிவு பொறுப்பாகாது.
இந்த பதிவு முழுக்க முழுக்க Android சார்ந்த கல்வி அறிவிற்காகவே எழுதப்பட்டுள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H