என்குரல் ..


விழுப்புரம் மாவட்டம் தெங்கியாநத்தம் அரசினர் உயர்நிலைப்பள்ளியின் குடியரசு தின கொண்டாட்டம்:
விழுப்புரம் மாவட்டம் தெங்கியாநத்தம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கா.மணி அவர்கள் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் திரு.கெ.சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் திரு.கே.குமரேசன் முன்னிலையிலும் குடியரசு தின விழா காலை 9மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது. சரியாக 9:30 மணியளவில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் திரு.கெ.சக்திவேல்அவர்கள் தேசிய கோடி ஏற்றினார்.தேசிய கொடிக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியரகள் மாணவர்கள்,மற்றும் ஊர்பொதுமக்களால் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.முதல் நிகழ்வாக பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியை திருமதி.மி . லூர்துமேரி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.65வது குடியரசு தினத்தை பற்றியும் 2020 இந்தியா வல்லரசு என்ற தலைப்பிலும் தலைமை ஆசிரியர் திரு.கா.மணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் திரு.க.சக்திவேல் அவர்களால் தென் இந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறப்பு பரிசு பெற்ற 9-ஆம் வகுப்பு மாணவன் திரு.ச.சிவக்குமார் அவர்களுக்கும் மற்றும் வழிகாட்டி அறிவியல் ஆசிரியர் திரு.ஆர் .சிவப்பிரகாசம் அவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.சரியாக 10:30 மணியளிவில் 6முதல் 10வகுப்பு வரை 65 மாணவர்களின் நடனம் , மாறுவேடம் மற்றும் தேசிய பற்றை உணர்த்தும் நாடகங்கள்,பேச்சுப் போட்டி,கட்டுரைப்போட்டி ஆகியவை அரங்கேறின ஊர் மக்கள் அனைவரும் கண்டுகளித்து மாணவர்களை வாழ்த்தினர்.நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் அவர்களால் ரூ 2000 மதிப்புள்ள பரிசு பொருட்டகள் வழங்கப்பட்டது .நிகழ்ச்சியின் இறுதியாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இந்த ஆண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளிக்க பாடுபடுவதாக உறுதியளிக்கப்பட்டது.பின்னர் பள்ளியின் மூத்த தொளிலாசிரியர் திரு.இரா.சுந்தரம் அவர்கள் நன்றி உரையாற்றி மதியம் 01:00 மணியளவில் தேசியகீதத்துடன் குடியரசு தின கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது.


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Labels