Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
முதலமைச்சர் தனிப்பிரிவில் 3 ஆண்டுகளில் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு:
கடந்த 2011 மே மாதம் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்த 10,75,743 மனுக்களில் 9,97,280 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
முதலமைச்சரின் தனிப் பிரிவில் பொதுமக்களிடமிருந்து அஞ்சல், மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் மூலம் தினமும் சுமார் 3 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன. கடந்த 2011 மே மாதம் முதல் இதுவரை 10 லட்சத்து 75 ஆயிரத்து 743 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 280 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
இந்த மனுக்களின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பெற்றோரை இழந்த நந்தினி (14), அனுஷா (13), திரிஷா (11), நமீதா (5) ஆகியோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சத்துக்கான வைப்புநிதி பத்திரங்கள்,வில்வித்தை வீராங்கனையான மாற்றுத்திறனாளி எஸ். கலைச்செல்விக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ. 1,14,532, மாற்றுத்திறனாளியான பொறியியல் மாணவர் பரணிக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 21,430-க்கான காசோலைகள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) வழங்கினார்.
வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கு 6 வயதுக்குள் சிறப்பு அறுவை சிகிச்சை செய்ய ரூ. 7 லட்சம் வரை செலவாகும் என்பதால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை என முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதனை ஏற்று சிறப்பு காது நரம்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சத்து 90 ஆயிரம் வரை ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த 11 மாதங்களில் 692 குழந்தைகளுக்கு காது நரம்பு அறுவை சிகிச்சை செய்ய ரூ. 53 கோடியே 56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
4 குழந்தைகளுக்கு காது நரம்பு அறுவை சிகிச்சை கருவிக்கான கூடுதல் மின்கலன்களை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) முதல்வர் ஜெயலலிதா வழங்கியதாக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








