Friday, 16 November 2018

TNPSC நூலகர் பணியிடங்கள் அறிவிப்பு 2018:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 29  நூலகர் (Librarian) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 23.02.2019 அன்று நடக்க உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 16.12.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

FLASH NEWS: கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) - 22 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

கஜா புயல் தொடர் கனமழை காரணமாக,

  1. கோவை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை  
  2. விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  3. ஈரோடு மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  4. கரூர் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  5. திண்டுக்கல்   மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை

கஜா புயலால் இன்று ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் .!அனைத்து தேர்வுகளும் ரத்து .!

கஜா புயலை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஜா புயலால் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார்.தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

DGE-HSE - II Year Sep/Oct 2018 - Download of Scan copy and Revaluation Retotal Notification

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.11.18

திருக்குறள்
அதிகாரம்:இனியவை கூறல்
திருக்குறள்99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

விளக்கம்:

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

பழமொழி

Experience is the mother of wisdom

அனுபவமே அறிவின் திறவுகோல்

இரண்டொழுக்க பண்பாடு

* விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை துன்புறுத்த மாட்டேன்.

* பாரதியாரின் கூற்றுப்படி எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்துவேன்

 பொன்மொழி

நான் மற்றவர்களைப் பற்றி பேசுவது என்றால் நல்ல பண்புகளை எடுத்து உரைப்பேனேயன்றி குறைகளை ஒருபோதும் கூறுவது இல்லை.

       - பிராங்க்ளின்

பொது அறிவு

1.இந்தியா சீனாவை பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் என்ன?

 மக்மோகன் எல்லைக்  கோடு

2.  உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  அக்டோபர் - 16

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் :

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

கரையை கடந்தது கஜா புயல் :

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மக்களை மிரட்டி வந்த கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயல் கரையைக் கடந்தாலும், அதன் தீவிரம் அடுத்த 6 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும். மேலும் பலத்த மழையும் பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு :

தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடந்தது. அதில் 24 ஆயிரத்து 362 பேர் எழுதினர். தேர்வுக்கு பிறகு 203 மாணவ, மாணவியர் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர். இதன்பேரில் 1179 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டதில் 4 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல் www.dge.tn.gov.in இணைய தளத்தில் நாளை பிற்பகல் வெளியிடப்படும்.

மாணவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கிராம மக்கள் எடுத்த முயற்சி!


SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் :

இந்திய வானிலை மைய இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்த கஜா.. எந்தப் புயலும் செய்யாத "சாதனை"!

சென்னை: இந்திய வானிலை மைய இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்து கஜா புயல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 3 நாட்களாக வங்கக் கடலில் நங்கூரம் பாய்ச்சி கொண்டு இருந்தது. இந்நிலையில் கஜா இன்று இரவு கரையை கடக்கிறது.

தரம் உயர்த்தப் பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஊதியம் வழங்க அரசாணை :

நவ., 25க்குள், 'நீட்' பதிவு பள்ளிகளுக்கு அறிவுரை:

அரசு பள்ளி மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு பதிவுகளை, வரும், 25ம் தேதிக்குள் முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர முடியும். தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, தனியார் பள்ளி மாணவர்கள், பல லட்சம் ரூபாய் கொடுத்து, தனியார் நிறுவனங்களில், 'டியூஷன்' எடுக்கின்றனர்.

லேப்டாப்' முறைகேடுக்கு முற்றுப்புள்ளி மாணவர் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு

முறைகேடுகளை தடுக்கும் வகையில், தமிழக அரசின், 'லேப்டாப்' திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்களின் விபரங்களை சேகரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், லேப்டாப் உட்பட, 14 வகை நல திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.இதில், இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை, அரசு பள்ளி மாணவர்கள்; அரசு உதவி பள்ளியில் படிக்கும், அரசு உதவி பெறும் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமக்ர சிஷ்யர் - அரசு பள்ளியில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர பயிற்றுனர் - கல்வி தகுதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளுதல் - CEO செயல்முறைகள் :

Thursday, 15 November 2018

கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ; இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது.

இனி யாரும் தப்பமுடியாது.! வாட்ஸ் அப் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

இன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாகவே வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

புதிய செயல்வழிக் கற்றல் அணுகுமுறை, 1 முதல் 3 வகுப்பு வரை பள்ளிப் பார்வை, புதிய படிவம்!! SPD PROCEEDINGS

புதிய செயல்வழிக் கற்றல் அணுகுமுறை, 1 முதல் 3 வகுப்பு வரை பள்ளிப் பார்வை, புதிய படிவம்!! SPD PROCEEDINGS  Click Here

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.11.18

DSE - NMMS - மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்ற 30.11.2018 வரை கால நீட்டிப்பு !

கணக்கெடுப்பு பணி நிறைவு அரசு பள்ளிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு :

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இனி பராமரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், இந்தாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

மாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகம் :

மாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. அனிமீயா குறைபாடு மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை  பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாராத் துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க   அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அறிவியல்-அறிவோம்: ஆபத்தான அழகுசாதன பொருட்கள்

ஆபத்தான அழகுசாதன பொருட்கள்.

#அறிவியல்-அறிவோம்
(சீ.ஹரிநாராயணன் GHSS தச்சம்பட்டு)

இந்தியாவில் ஆண்டுக்கு 220 கோடிகள் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்கள் ஆண்டுக்கு 15% விற்பனை வளர்ச்சி பெற்று, பெண்களை 'நடமாடும் அழகு சாதனப் பெட்டகமாக' மாற்றி வருகின்றன.

இயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே ஆபத்தாக விளைகின்றது.

சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் சிறப்பாசிரியர்களின் சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்

சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்தோம். 4 வாரம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள், ராணுவத்தில் பணியாற்றியவர்கள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு நான்கு வாரத்தில் தாசில்தார், ஆர்டிஓவிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வழங்கவில்லை என்றால் பொதுப்பிரிவில் வைத்து நியமனங்கள்  வழங்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கூடுதல் மதிப்பெண்கள்: குறைகிறதா கல்வியின் தரம்?

பொதுத் தேர்வு முடிவுகளில் மாநிலத்தின் முதல் 10 இடங்களைப் பிடிப்பதற்காக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு சில பள்ளிகளில் சராசரி தேர்ச்சியை அதிகரித்துக்காட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண்களை கூடுதலாக அளித்து மதிப்பெண் பட்டியலை கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவதால் கல்வியின் தரம் குறைக்கப்படுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திய மாணவர்கள்!

கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், அனைவரையும் கவரும் விதமாக புதுமையான முறையில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார்.

இனி குறைதீர் முகாம் கட்டாயம் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு :

மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, ஆசிரியர்களுக்கான குறைதீர் முகாம் நடத்தி, புகார்களை கேட்டறிய வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.கட்டாயம்பள்ளிக்கல்வித்துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணப்பலன் மற்றும் பதவி உயர்வில் முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளை, நிர்வாக மட்டத்திலே சீர் செய்துவிடலாம். இதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால், நீதிமன்றத்தை நாடுவதே இறுதி தீர்வாகிவிட்டது.தேங்கிய வழக்குகள் மீது, ஒத்துழைப்பு வழங்குவதோடு, ஆசிரியர்களின் புகார்கள் கேட்டறியவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.இதற்காக ஏற்கனவே அமலில் இருந்த குறைதீர் முகாம், இனி கட்டாயம் நடத்த வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, 14 November 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.11.18

நவம்பர் 14


தேசிய குழந்தைகள் தினம்


திருக்குறள்

அதிகாரம்:இனியவை கூறல்

திருக்குறள்:97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

விளக்கம்:

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

TNPSC GROUP -2 தேர்வு உத்தேச விடைகள் இன்று வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 11-ந்தேதி குரூப்-2 தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இன்று குழந்தைகள் தினத்தையொட்டி வண்ண உடை அணிந்து வர மாணவர்களுக்கு சலுகை

நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக பள்ளிகளில், குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.

Team Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.?


தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் செயல்முறைகள்! 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் :

ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அனைத்துக் கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

CPS திட்டம் - கணக்குகளை பராமரிக்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு - ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் ஈரோடு நம்பியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களின் வருகை பதிவு தொடர்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் தொடங்கப்படும். விரைவில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும்.

ரெட் அலர்ட் வாபஸ்!!

கஜா புயல் காரணமாக விடுக்கப்பட்ட
'ரெட் அலர்ட்' எச்சரிக்கையானது தமிழக மக்களுக்கு இல்லை, நிர்வாகத்திற்கு மட்டுமே என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சற்றுமுன் புயலின் வேகம் குறைந்ததால் ஆந்திராவுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாக்கி உள்ள காஜா புயல் வரும் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, கரையை கடக்கும் போது, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை மையம்,

குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்


நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு
வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக்  கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...

துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி: 'மாத்தி யோசித்த' மாணவியர்!


எம்.சாண்டுக்கு பதிலாக கட்டட கழிவில் இருந்து மாற்று மணல், துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், பள்ளி மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.

அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. 'கழிவில் இருந்து வளம்' (வேஸ்ட் டூ வெல்த்) என்ற தலைப்பில் மாணவ, மாணவியரின் ஆய்வு கட்டுரைகள், புதிய கண்டுபிடிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்டன.திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த செஞ்சுரி பவுண்டேஷன் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு தமிழ் பிரிவு மாணவியர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீசக்தி சிநேகா ஆகியோர் தங்களது ஆய்வை சமர்ப்பித்தனர்.

பணிக்கொடைக்கான காலவரம்பை 3 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை

பணிக்கொடை பெறுவதற்கான காலவரம்பை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாகக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 1972ஆம் ஆண்டின் பணிக்கொடைச் சட்டப்படி ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்றியிருந்தால்அவருக்குப் பணிக்கொடை வழங்க வேண்டும்

பள்ளி வளாகத்தில் கொசு:- பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பள்ளி வளாகத்தில் கொசு அதிக அளவில் இருப்பதால்
ஒரு வார காலம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளிக்கு ஒரு வாரம் காலம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொதிக்கும் சூரியனை ஆராய புறப்பட்ட தி பார்கர் சோலார் ப்ரோப்: தாங்குமா?


தொடர்ந்து பல்வேறு நாடுகள் பல விண்கலன்களை விண்ணில் அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது, இந்நிலையில் நாசா தனது புதிய யோசனையை செயல்படுத்தி உள்ளது, அது என்னவென்றால் நாசா உருவாக்கியுள்ள பார்கர் சோலார் விண்கலம், சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது.

கற்றல் விளைவுகள்' பயிற்சி

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', பயிற்சி நடத்தப்பட உள்ளது

மாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், கல்வியாண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது

ஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை கல்வித்துறையில் 'ஆபரேஷன்-இ' திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்*


*வாரம் ஒரு நாள் முன்னறிவிப்பின்றி பத்து அதிகாரிகள் குழு ஒரே நேரத்தில் பள்ளிகளில் ஆய்வு செய்யும் இத்திட்டத்தை சி.இ.ஓ.,வாக இருந்த கோபிதாஸ் துவக்கினார்*

Best Science Teacher Award 2018 - Instructions And Application Form

வரலாற்றில் இன்று ( 14.11.2018 ) :


நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1885 – செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.
1889 – நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
1918 – செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
1922 – பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.

அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு:

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.

டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறை விடப்படுகிறது.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.

தேர்தல் பணி அலுவலர்கள் பட்டியல் : 48 மணி நேரத்தில் வழங்க உத்தரவு :

லோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை 48 மணி நேரத்திற்குள் தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும், என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளன. இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை சேகரித்து பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.தேனி தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:

Tuesday, 13 November 2018

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.

TNPSC Group 2: குரூப் 2 தேர்வு விடை தாள் ரீலீஸ் அறிவிப்பு:

சென்னை : தமிழக அரசின் தேர்வுக் குழு சார்பில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான விடைத் தாள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நிலவு; ஏன் மறைக்கப்படுகிறது?


ஹங்கேரிய நாட்டை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு, ஒரு நீண்ட கால வானியல் ஊகத்தை உறுதிப்படுத்தியுள்ளது: பூமிக்கு மொத்தம் மூன்று இயற்கையான செயற்கைக்கோள்கள் அதாவது நிலவுகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Labels