டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் ! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் !

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்கசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார். மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H