நெல்லையில் லைநெல்யில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நெல்லையில் லைநெல்யில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:

திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பணி நிரவல், பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமைநடைபெற்றது.கலந்தாய்வில் 133 பட்டதாரி ஆசிரியர்களும், 33 இடைநிலை ஆசிரியர்களும், 15 தொகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு இவர்கள் காலை 9 மணிக்கே வந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் 10 மணிக்கு தொடங்க வேண்டிய கலந்தாய்வு இணையதள சர்வர் செயல்படாத காரணத்தால் பிற்பகல் வரை கலந்தாய்வு தொடங்கவில்லை. பிற்பகல் 2 மணிக்கு பிறகு தொடங்கிய கலந்தாய்வில் முதல் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள்மாவட்டம் விட்டு மாவட்டம் விட்டு பணியிட மாறுதல் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு மட்டும் விரும்பிய மாறுதல் கிடைத்தது.தொடர்ந்து சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் 7 பேருக்கு பணி இடமாறுதல் கிடைத்தது. இரவு 10 மணியை கடந்த நிலையில் இணையதள சர்வர் இயங்காததால் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தேக்கம் ஏற்பட்டது.இதனால் கலந்தாய்வுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறைகளில் தங்கியிருந்தனர்.நள்ளிரவில் 2 மணிக்கு பிறகு கலந்தாய்வு சர்வர் செயல்படத் தொடங்கியதால் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தூக்கத்தை இழந்து பணியிட மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த கலந்தாய்வில் ஒருவருக்கு கூட வெளி மாவட்டத்திற்கான பணியிட மாறுதல் கிடைக்கவில்லை.இதை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.பின்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. இணையதள சர்வர் சரிவர இயங்காத காரணத்தால் அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு பல மணி நேரம் தாமதமாககலந்தாய்வில் குளறுபடி:கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் காலி பணியிடங்கள், பிற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. கலந்தாய்வில் முறையான நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H