இவர்கள் அனைவரும் நேற்று காலை 9 மணிக்கு தேர்வு எழுதுவதற்காக தங்களது மையங்களில் காத்து இருந்தனர். இதனிடையே, காஜியாபாத் நகரில் உள்ள இரண்டு வங்கிகளில் 40 பெட்டிகளில் மருத்துவ கல்லூரியின் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் மூடி முத்திரையிடப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தன. தேர்வு நடக்க இருந்ததையொட்டி நேற்று காலை இந்த வங்கிகளின் கிளைகளில் வைக்கப்பட்டிருந்த வினாத்தாள் பெட்டிகளை எடுத்துவர அதிகாரிகள் சென்றனர். முத்திரைகள் அகற்றம் அப்போது, அந்த பெட்டிகளில் இருந்த முத்திரை அடையாளம் அகற்றப்பட்டு இருப்பது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிலிருந்த வினாத்தாள் திருடப்பட்டோ, அல்லது நகல்கள் எடுக்கப்பட்டோ இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இதனால் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக மாநிலம் முழுவதும் தகவல் பரவியது. இதனிடையே வினாத்தாள் பெட்டிகளின் முத்திரைகள் அகற்றப்பட்டு இருந்தது, குறித்த தகவல் மாநில அரசுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக உத்தரபிரதேச மருத்துவ தேர்வுகள் கட்டுப்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சிங் அறிவித்தார்.ரத்தான தேர்வுகளை ஜூலை மாதம் 20-ந்தேதி நடத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.விசாரணைக்கு உத்தரவுஇதனிடையே வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் குறித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் இது பற்றி விசாரிக்க உடனடியாக உயர்மட்ட குழு ஒன்றை அமைக்குமாறும் மாநில முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கோரிக்கை விடுத்துள்ளார்.