Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TNPSC
குரூப்-1 தேர்வு ரத்து என்று சுப் ம் கோர்ட்டு தீர்ப்பு: 83 அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு:
குரூப்-1 தேர்வு ரத்து என்று சுப் ம் கோர்ட்டு தீர்ப்பு: 83 அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு:
டி.என்.பி.எஸ்.சி.
நடத்திய குரூப்-1 தேர்வு செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை
தொடர்ந்து, அந்த தேர்வு மூலம் பணி நியமிக்கப்பட்ட 83 அதிகாரிகளை பணி
நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு
ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. தேர்வில் முறைகேடு சப்-கலெக்டர்,
துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட பத்திரப்பதிவு அதிகாரி உள்ளிட்ட
பதவிகளுக்கு குரூப்-1 தேர்வை 2004-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற 83 பேர் சப்-கலெக்டர்
உள்ளிட்ட பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.இந்த குருப்-1 தேர்வில்
பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் மாதவன் உள்பட பலர்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன்
பெஞ்ச், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வினை
ரத்து செய்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தள்ளுபடி இந்த
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை
உறுதிசெய்து, கடந்த ஜூன் 30-ந் தேதி தீர்ப்பளித்தது. இந்த
தீர்ப்பினை தொடர்ந்து, தமிழகத்தில் சப்-கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை
வகித்து வரும் 83 பேரை அரசு பதவி நீக்கம் செய்யவில்லை. இந்த நிலையில்,
சென்னை ஐகோர்ட்டில் உள்ளகரத்தை சேர்ந்த செல்வராஜ் செல்லையன் என்பவர்
தாக்கல் செய்துள்ள கோ-வாரண்டோ மனுவில் கூறியிருப்பதாவது:-83
குரூப்-1 அதிகாரிகளின் தேர்வு செல்லாது என்று 2011-ம் ஆண்டு இந்த ஐகோர்ட்டு
டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தும், இதுவரை அவர்களை தமிழக அரசு பணியில்
இருந்து நீக்கம் செய்யவில்லை.இடைக்கால தடை மேலும் ஐகோர்ட்டு
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு
கடந்த ஜூன் 30-ந் தேதி தள்ளுபடி செய்துவிட்டது. இந்த தீர்ப்பு பிறப்பித்த
அடுத்த நொடியே, 83 அதிகாரிகளும் அரசு பதவியை வகிக்க முடியாது. ஆனால்,
அவர்களை தொடர்ந்து பணி செய்யவும், அரசு ஆவணங்களில் கையெழுத்திடவும், அரசு
நிதியை கையாளவும் தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின்
முதன்மை செயலாளர் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளார். எனவே, 83 குரூப்-1
அதிகாரிகளை பணி செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும். பணி நீக்கம்இவர்கள்
எந்த சட்டத்தின்கீழ் அரசு உயர் பதவியை தொடர்ந்து மேற்கொள்ள
அனுமதிக்கப்பட்டனர் என்று விளக்கம் கேட்டு, 83 பேரையும் பணிநீக்கம் செய்து
உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த
மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
சார்பில் வக்கீல்கள் மணிகண்டன் வதன்செட்டியார், விஜயலட்சுமி ஆகியோர் ஆஜராகி
வாதிட்டனர். இதையடுத்து, மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி
தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளருக்கு
நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








