சாட்சிகளிடம் விசாரணை : இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர் பழச்சாமி, அவரது மனைவி, மகள் உள்ளிட்ட 24 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேரை தமிழக அரசு வழக்கில் இருந்து விடுவித்தது. இவ்வழக்கு தொடர்பாக சுமார் 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 501 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட 230 பேர் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.இந்த தீவிபத்திற்கு பிறகு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் கல்வித்துறை அதிகாரி, நகராட்சி கமிஷ்னர் மற்றும் நகர திட்டக்குழு அதிகாரி ஆகியோர் விதிமுறைகளை பின்பற்றி முறையாக ஆய்வு செய்யாததே இந்த கொடூர விபத்திற்கு காரணம் என அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி நடைபெற்ற விசாரணையில், கல்வித்துறை அதிகாரிகள், நகராட்சி கமிஷ்னர், நகர திட்டக்குழு தலைவர் உள்ளிட்டோரையும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டது.தீர்ப்பு : பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளி தீ விபத்து வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமுமே இந்த விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. முதற்கட்ட தீர்ப்பில், வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரை கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக கோர்ட் அறிவித்துள்ளது.