பொறியியல்
கலந்தாய்வு தேதி இன்னும் தெரியாததால்
மாணவ, மாணவியர் தவியாய் தவித்து வருகின்றனர்.இதற்கிடையே
ஏ.ஐ.சி.டி.இ. (அகில
இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு) நிலவரத்தை
அறிவதற்காக தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார்
ஜெயந்த் டில்லியில் முகாமிட்டுள்ளார்.
தமிழகத்தைச்
சேர்ந்த புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு
அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ.க்கு
ஒரு வாரம் கால அவகாசம்
வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 27ம்
தேதி துவங்க இருந்த பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு
தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு
துவக்கம், திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை, எப்போது வெளியாகும் என்று
தெரியாமல் மாணவ, மாணவியர், தவியாய்
தவித்து வருகின்றனர். இது குறித்து அறிய
தினமும் ஏராளமான மாணவ,
மாணவியர்
அண்ணா பல்கலைக்கு வந்தபடி உள்ளனர்.
கலந்தாய்வு
தேதி நேற்று வெளியாகும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பையும்
அண்ணா பல்கலை வெளியிடவில்லை. தமிழகத்தைச்
சேர்ந்த பொறியியல் கல்லூரிகள் மீது ஏ.ஐ.சி.டி.இ.
எடுத்துள்ள நடவடிக்கையை அறிந்தால் தான் அதற்கேற்ப கலந்தாய்வு
தேதியை அண்ணா பல்கலை நிர்ணயிக்க
முடியும்.
எனவே ஏ.ஐ.சி.டி.இ. நிலவரத்தை
அறிவதற்காக தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார்
ஜெயந்த் நேற்று டில்லி விரைந்தார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம்
உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று உயர்கல்வித்துறை செயலர்
ஹேமந்த் குமார் சின்காவுடன் ஆலோசனை
நடத்தினர்.
குமார்
ஜெயந்த் சென்னை திரும்பியதும், புதிய
கலந்தாய்வு தேதி மற்றும் புதிய
கலந்தாய்வு அட்டவணை ஆகியவை குறித்த
அறிவிப்பு இன்று வெளியாகலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.