Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
வானூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள். உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து அலுவலகத்திற்கு பூட்டுபோட்டு ஆசிரியர்கள் திடீர் போராட்டம்:
வானூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள். உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து அலுவலகத்திற்கு பூட்டுபோட்டு ஆசிரியர்கள் திடீர் போராட்டம்:
வானூரில் உதவி தொடக்க கல்வி அலுவலகம்
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவித்தொடக்க
கல்வி அலுவலர், கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர்
மற்றும் 4 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் கட்டுப்பாட்டில் 106
பள்ளிகள் உள்ளது. இதில் 305 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு சம்பளம், விடுப்பு, பணி சம்பந்தமான அனைத்தும் இந்த
அலுவலகத்தின் மூலமே பராமரிக்கப்பட்டு வருகிறது.
உதவித்தொடக்க
கல்வி அலுவலராக அக்சிலியம் பெலிக்ஸ், கண்காணிப்பாளராக ஜோதிலிங்கம்
உள்ளனர். இவர்கள் ஆசிரியர்கள் மாற்றம் உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு லஞ்சம்
கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால், கையெழுத்திடாமல் அலைக்கழிப்பதாக
ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் முறையாக அலுவலகத்திற்கு வராமலும்
இருந்து வருவதாக கூறப்படுகிறது. கண்காணிப்பாளர் ஜோதிலிங்கம், அவரது மனைவி
நடத்தும் பள்ளியை கவனிப்பதிலேயே ஆர்வம் காட்டுவதால், அலுவலக பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை
கண்டித்து நேற்று தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, அனைத்து ஆசிரியர் கூட்டணி மற்றும் பட்டதாரி
ஆசிரியர் சங்கத்தினர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் அலுவலர்களை சிறை
வைத்து பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து
தகவல் அறிந்த ஆரோவில் சப்&இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில்
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து
சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அலுவலர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








