அமெரிக்காவே வியப்போடு பார்த்த ஒரு தமிழ் மனிதர்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அமெரிக்காவே வியப்போடு பார்த்த ஒரு தமிழ் மனிதர்:

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில்அமெரிக்கா முழுமைக்கும்வியப்போடு கவனிக்கப்பட்டு வரும்பெயர்....இதுவரை யாருமே செய்திராத ஓர்அதிசயத்தை செய்து காட்டியதன்மூலம் அமெரிக்க பிஸினஸ்உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. இதில்பெருமைக்குரிய விஷயம், இவர்ஒரு தமிழர் என்பதே.அப்படி என்னதான்சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?கே.ஆர். ஸ்ரீதர்....திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங்காலேஜில் (தற்போது என்.ஐ.டி.)மெக்கானிக்கல் என்ஜினீயரிங்படித்து முடித்தவுடன் அமெரிக்காவில்உள்ள இல்லினாய்ஸ்
பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர்என்ஜினீயரிங் படித்து விட்டு,அதே பல்கலைக்கழகத்தில்ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும்பெற்றார் ஸ்ரீதர்.
மிகப் பெரியபுத்திசாலியாக இருந்தஇவரை நாசா அமைப்பு உடனடியாகவேலைக்கு எடுத்துக் கொண்டது.அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ளஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின்இயக்குநராக அவரை நியமித்தது.செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழமுடியுமா? அதற்குத் தேவையானசாத்தியக்கூறுகளைக்கண்டுபிடிப்பது எப்படி?என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின்வேலை. முக்கியமாக செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத்தேவையான ஆக்ஸிஜனை தயார்செய்ய முடியுமா என்கிறஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்தஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும்பெற்றார்.ஆனால் அமெரிக்க
அரசாங்கமோ திடீரென அந்தஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது.என்றாலும் தான்கஷ்டப்பட்டு கண்டுபிடித்தவிஷயத்தை ஸ்ரீதர்அப்படியே விட்டுவிடவில்லை. அந்தஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில்செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது,ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப்பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள்அனுப்பி, அதனோடு இயற்கையாகக்கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால்என்னநடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம்தயாராகி வெளியே வந்தது.இனி அவரவர்கள் அவரவருக்குத்தேவையான மின்சாரத்தை இந்தஇயந்திரம் மூலம் தயார்செய்து கொள்ளலாம் என்கிற
நிலையை ஸ்ரீதர்உருவாக்கி இருக்கிறார். தான்கண்டுபிடித்த இந்தத் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில்செய்து காட்டியபோது அத்தனை விஞ்ஞானிகளும்அதிசயித்துப் போனார்கள். ஆனால்இந்த புதிய தொழில்நுட்பத்தைபயன்படுத்தி, வர்த்தக ரீதியில்மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில்அதற்கான இயந்திரங்களை உருவாக்கவேண்டும். இதற்கு பெரிய அளவில்பணம் வேண்டும்.இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப்உருவாக்கும் பிஸினஸ்பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல்நிறுவனங்கள்தான்பணத்தை முதலீடு செய்யும்.ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர்கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர்.சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாகஇருக்கும் மிகப் பெரிய வென்ச்சர்கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர்பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான்டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும்வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான்,கூகுள் போன்ற நிறுவனங்கள்இன்று பிரம்மாண்டமாகவளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர்ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான்டூயர் தொடக்கத்தில் போட்டமுதலீடு வெறும் 25 மில்லியன்டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில்செயல்படுத்த ஜான் டூயர் போட்டமுதலீடு 100 மில்லியன் டாலர்.இது மிகப் பெரும் தொகை. என்றாலும்துணிந்து முதலீடு செய்தார் ஜான்.காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்ததொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின்உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல்பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர்மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி,அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும்சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்தவகையிலும் பங்கம் வராத மின்உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்என்று நினைத்தார் அவர். தவிர,ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைக்கொண்டு குறைவான செலவில்மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்தபாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம்குறைந்ததூரத்திலேயே பயன்படுவதால் மின்இழப்பு என்கிறபேச்சுக்கே இடமில்லை.இது மாதிரி பல நல்ல விஷயங்கள்ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில்இருப்பதை உணர்ந்ததால் அவர்அவ்வளவு பெரியதொகையை முதலீடு செய்தார்.நல்லவேளையாக, ஜான் டூயரின்எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள்கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன்விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்'என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ்தயார் செய்துள்ளார்.சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ளஇரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர்உருவாக்கியுள்ள இயந்திரம்.இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும்இயற்கை எரிவாயுவையும்செலுத்தினால் அடுத்த நிமிடம்உங்களுக்குத் தேவையான மின்சாரம்தயார். இயற்கை எரிவாயுவுக்குப்பதிலாகமாட்டுச்சாண வாயுவையும்செலுத்தலாம். அல்லது சூரியஒளியைக் கூட பயன்படுத்தலாமாம்.இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும்வைத்துக் கொள்ளலாம். வெட்டவெளியிலும் வைத்துக் கொள்ளலாம்என்பது சிறப்பான விஷயம்.உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள்மின் இணைப்புப் பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில்ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராமமக்களுக்கு மின்சாரம் கொடுத்தால்,அதனால் அரசாங்கத்துக்கு எந்தலாபமும் இல்லை என்பதால் அவர்கள்மின் இணைப்புக் கொடுப்பதில்லை.கிராமத்தை விட்டு வந்தால்மட்டுமே பொருளாதார ரீதியில்முன்னேற முடியும் என்கிறநிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால்இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும்இருந்தால் உலகத்தின் எந்தமூலையிலும் மின்சாரம் தயார்செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம்இருந்தால் இரண்டு வீடுகளுக்குத்தேவையான மின்சாரம்கிடைத்துவிடும். இதே பாக்ஸ்இந்தியாவில் இருந்தால் நான்கு முதல்ஆறு வீடுகளுக்குத் தேவையானமின்சாரம் கிடைத்துவிடும்.மெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம்யன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின்எண்ணிக்கை குறையக் காரணம்.இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைபயன்படுத்தி மின்சாரம் தயார்செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான்முதன் முதலாக இந்தத்தொழில்நுட்பத்தை வாங்குவதற்கானகான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது.ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள்உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட்மின்சாரமும் அதன்ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது.வால் மார்ட் நிறுவனமும் 400கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும்பாக்ஸை வாங்கி இருக்கிறது.இப்போது Fedex, E bay,கோக்கா கோலா, அடோப் சிஸ்டம்,சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்றபல நிறுவனங்களும் இந்த புதியதொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி மின்சாரம் தயார்செய்கின்றன.100 கிலோ வாட் மின்சாரம் தயார்செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7முதல் 8 லட்சம் டாலர்! அட,அவ்வளவு பணம் கொடுத்து வாங்கவேண்டுமா? என நீங்கள்நினைக்கலாம். ஆனால் இந்தத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் Ebay நிறுவனம் கடந்தஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது.தனக்குத் தேவையான 500 கிலோ வாட்மின்சாரத்தை இந்த பாக்ஸின்மூலமே தயார் செய்துவிடுகிறது.இந்த பாக்ஸ்களை வாங்கியஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம்டாலர் வரை மின்கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் Ebay.இன்னும் ஐந்து முதல்பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின்பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்'இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்தபாக்ஸை வாங்கி பயன்படுத்துகிறஅளவுக்கு அதன் விலை 3,000டாலருக்குள் இருக்கும்''என்கிறார்ஸரீதர். அந்தஅளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால்,ஒரு காலத்தில் லட்சத்தில் விற்றகம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள்கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின்ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்ததொழில்நுட்பம் எதிர்காலத்தில்நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்கமக்கள் அந்தத் தமிழரின்பெயரை உச்சரிப்பார்கள் என்பதில்சந்தேகமில்லை
.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H