'தொகுப்பூதியத்தில்
பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை 10ஆயிரம் ரூபாயாக உயர்த்த
வேண்டும்' என அரசுக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேண்டுகோள்
விடுத்துள்ளது.தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர்
ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என
ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் கடந்த, 2013, மே மாதம் 782
பணியிடங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான நேர்முகத்
தேர்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 3110 பேர் அழைக்கப்பட்டனர்.
ஆனால், இப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. ஏற்னவே
தேர்ந்தெடுக்கப்பட்ட 10ஆயிரத்து 548 ஆசிரியர் பணியிடங்களுக்கு
தொகுப்பூதியமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இத்துடன் கூடுதலாக
இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து 7 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படும் என தகவல்
வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டு முதல் பணியாற்றும் இத்தகைய பகுதி நேர
ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; பணி
நிரந்தரம் செய்து தர வேண்டும் இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.







