இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை
செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து
மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களை போலிஸார் தடுத்தனர் அதனை தொடர்ந்து மனித
சங்கிலி போராட்டம் நடத்திய போராட்டக்கார்ர்கள் மீது
தடியடி நடத்தப்பட்டது இதில் ஒரு பெண்
உட்பட பலர் காயமடைந்தனர் போராட்ட
குழு தலைவர் செல்லதுரை கைது
செய்யப்பட்டுள்ளார்.அனைவரையும்
காவல் துறையினர் கைது செய்து தற்போது
மதுரவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கைது
செய்தவர்களை வைத்துள்ளனர் .
இது குறித்து போராட்டகாரர்களில்
ஒருவர் கூறியது நாங்கள் அமைதியாக
போராடினோம் எங்கள் மீது காவல்துறையினர்
தடியடி நடத்தினர் இதில் ஒரு பெண்னுக்கு
பலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர்
சேப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
எனக்கு சட்டை கிழிந்துள்ளது கையில்
அடிபட்டுள்ளது எங்கள் போராட்டத்தை திசை
திருப்பிய சிலர் மீதும் எங்கள்
மீது தடியடி நடத்திய காவல்துறையினர்
மீதும் இன்று மாலை மாநகர
காவல் துறை ஆனையாளரிடம் புகார்
மனு கொடுக்க செல்ல உள்ளோம்.
என்று கூறினார்.
