நிலக்கோட்டை அருகே பரபரப்பு சம்பவம்: பள்ளிக்கூடத்தில் பிளஸ்- 1 மாணவர் அடித்துக் கொலை சக மாணவர் கைது-தினத்தந்தி - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நிலக்கோட்டை அருகே பரபரப்பு சம்பவம்: பள்ளிக்கூடத்தில் பிளஸ்- 1 மாணவர் அடித்துக் கொலை சக மாணவர் கைது-தினத்தந்தி

நிலக்கோட்டை, நவ.13-நிலக்கோட்டை அருகே பள்ளிக்கூடத்தில் நேற்று பிளஸ்-1 மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து சக மாணவரை போலீசார் கைது செய்தனர். பிளஸ்-1 மாணவன்திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டியில் கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் அதே பகுதியில் உள்ள எத்திலோடு காலனியை சேர்ந்த ஆசையன் என்பவரது மகன் வினோத் (வயது 16) பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கும் இவருடன் படிக்கும் முத்தலாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பள்ளியில் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதில் வினோத்தை அந்த மாணவன் தாக்கினார். இதனால் நேற்று முன்தினம் வினோத் பள்ளிக்கு வரவில்லை. நேற்று காலையில் அவர்கள் 2 பேரும் பள்ளிக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வகுப்புகள் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் காலை 11 மணியளவில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. அப்போது வினோத் தனது நண்பர்களுடன் வகுப்பறையை விட்டு வெளியே வந்தார். சுயநினைவு இழந்தார்பள்ளி மைதானத்தில் அவர் வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த முத்தலாபுரத்தை சேர்ந்த மாணவனுக்கும், வினோத்துக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அந்த மாணவர், வினோத் தலையின் பின்பக்கத்தில் தனது கையால் ஓங்கி அடித்துள்ளார். உடனே வினோத் சுயநினைவு இழந்து கீழே சரிந்தார். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது வினோத் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் தூக்கிச் சென்று, அவருக்கு சுயநினைவு ஏற்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அது முடியாமல் போனது. இதனால் சம்பவம் குறித்து வினோத்தின் தந்தை ஆசையனுக்கு தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார். இதனால் பதறியடித்து பள்ளிக்¢கு வந்த வினோத்தின் பெற்றோர் அவரை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்¢கு தூக்¢கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக¢டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். பின்னர் அவர் உடல் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை வழக்குஇந்த சம்பவம் குறித்து ஆசையன் கொடுத்த புகாரின் பேரில் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கொலை வழக்குப்பதிவு செய்து முத்தலாபுரத்தை சேர்ந்த மாணவரை கைது செய்தார். மாணவர் இறந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை, நிலக¢கோட்டை தாசில்தார் மோகன் ஆகியோர் பள்ளிக்கூடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மாணவர் இறந்த தகவல் கேட்டு அவரது உறவினர்கள் பள்ளி வளாகம், நிலக¢கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலையம் முன்பாக குவிந்தனர். இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிலக¢கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி, இன்ஸ்பெக¢டர் சுரேஷ் தலைமையில் 50-க¢கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர் கொலையான சம்பவம் நிலக்¢கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H