விழுப்புரத்தில் நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 118 பேர் பங்கேற்றனர்.விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
தேர்வில் தேர்ச்சி பெற்ற, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
சனிக்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
மார்ஸ் தலைமை வகித்தார். கலந்தாய்வில் மொத்தம் 118 பேர் பங்கேற்றனர்.
இவர்களில் 106 பேர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தேர்வு
செய்தனர். 12 பேர் வெளி மாவட்ட பள்ளிகளை தேர்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கான 234 காலியிடங்கள் உள்ளன. தற்போது விழுப்புரம்
மாவட்டத்தில் இருந்து 106 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து 100-க்கும்
மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளை தேர்வு செய்துள்ளனர் என்று
முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.