தமிழ்நாடு முது கலைப்பட்டதாரி ஆசிரியர்
கழகம் சார்பில் பிளஸ்-2 விடைத்தாள்திருத்தும் மையங்கள் முன்பாக ஒருமணிநேரம்
ஆர்ப்பாட்டம் செய்து விடைத்தாள்திருத்தும் பணியை 1 மணிநேரம்
புறக்கணிக்கப்போவதாக தெரிவித்து இருந்தனர்.அதன்படி
நேற்று சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விடைத்தாள்
திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஒரு மணிநேரம் விடைத்தாள்
திருத்துவதை புறக்கணித்தனர்.
தஞ்சையில் நடந்த
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகி சுரேஷ் தலைமை தாங்கினார். சென்னை
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளவிடைத்தாள்திருத்தும் மையத்தில் மாநில
அமைப்பு செயலாளர் பிரபுதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்
கூறியதாவது:-
தேர்வு அறைகளில் கண்காணிப்பாளராக
உள்ள ஆசிரியர்களை, பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தேர்வுத்துறை
இயக்குனரின் ஆணை தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள 30 ஆயிரம் முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களை அச்சமடைய வைத்துள்ளது. மாணவ-மாணவிகளை உடல் ரீதியாக
சோதிக்கக்கூடாது என்று விதி உள்ளது. மாணவர்கள் மறைத்துவைத்து காப்பி
அடிக்கிறார்கள். மாணவர்கள் காப்பி அடித்தால் அவர்கள் செய்யும் தவறுக்கு
அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் இடை நீக்கம் செய்வது இயற்கை நியதிக்கு
புறம்பானது. எனவே இந்த ஆணையை திரும்ப பெறவேண்டும். இந்த கோரிக்கையை
வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இவ்வாறு பிரபுதாஸ் தெரிவித்தார். சென்னையில் 4 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.