ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
நடத்தப்ட்ட முதுகலை பட்டாதாரி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்
தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு முகாம் வருகிற
28ம் தேதி நடைபெற இருக்கிறது.கடந்த 2013-14, 2014-15 நடத்தப்பட்ட போட்டித்
தேர்வுகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 57 ஆசிரியர்கள் தேர்ச்சி
பெற்றனர். இவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு முகாம்
சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற
இருக்கிறது.
எனவே இந்த முகாமில் கலந்து கொள்வோர் குறிப்பிட்ட
நேரத்திற்கு முன்னதாக காலை 9 மணிக்கு மையத்திற்கு வந்து விட வேண்டும்.
மேலும், இது தொடர்பாக பங்கேற்பவர்களுக்கு ஏற்கனவே அலுவலகம் மூலம் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்
தெரிவித்தார்.