தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு,
பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி
நிலையத்தில் (ஐ.டி.ஐ.) தேர்வு முடித்து இதுவரை சான்றிதழ்கள் பெறாதவர்கள்
பெற்றுகொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசினர் தொடர் அறிவுரை மையம், அம்பத்தூர் தொழிற்பயிற்சி
நிலையத்தில் தொழில் பழகுநர் சட்டத்தின் கீழ் அகில இந்திய தொழில் பழகுநர்
தொழில் தேர்வை 1971 முதல் ஏப்ரல் 2014 வரை எழுதி தேர்ச்சி பெற்ற பலர்
தங்களது சான்றிதழ்களைப் பெறாமல் உள்ளனர்.
இவர்கள் தங்களது அசல் சான்றிதழை உரிய ஆவணங்களுடன்
நேரில் சென்று அலுவலக நாள்களில் உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர்
அறிவுரை மையம், (தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) அம்பத்தூர், சென்னை-98 என்ற
முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.








